தொழில்நுட்பம்
Typography

உணவு ஆர்டர் செய்யப் பயன்படும் தளமான சொமேட்டோ (Zomato), தற்காலிகமாக
ஹேக் செய்யப்பட்டது.

இதையடுத்து, 'சொமேட்டோ பயனாளர்கள் 12 கோடி பேரில், 1.7 கோடி பேரின்
தகவல்கள் திருடப்பட்டுள்ளது. மேலும், தளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள பணப்
பரிமாற்றம் சம்பந்தமான தகவல்கள் எதுவும் களவுபோகவில்லை என்று சொமேட்டோ
நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதைப் போல சொமேட்டோவின் தளம் ஹேக் செய்யப்படுவது முதல் தடவை இல்லை.
முன்னர், 2015ஆம் ஆண்டு இதைப் போன்றே ஹேக் செய்யும் சம்பவம் ஒன்று
நடந்துள்ளது.இந்தச் சம்பவம், சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியராலோ அல்லது ஒரு
ஊழியரின் தகவல்கள் திருடப்பட்டு, அதன் மூலம் ஹேக்கிங் நடந்திருக்கலாம்
என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து, சொமேட்டோ நிறுவனம் தீவிர
விசாரணை நடத்திவருவதாகத் தெரிவித்துள்ளது. தற்போது, ஹேக் செய்யப்பட்ட
சொமேட்டோ பயனாளர்களின் அக்கவுன்ட்ஸ் லாக்-அவுட் செய்யப்பட்டுவிட்டதாம்.
மேலும், புதிதாக கடவுச்சொல் பதிவிடும்படியும் அவர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்