தொழில்நுட்பம்
Typography

கம்ப்யூட்டர்களை பாதித்து வரும், 'வான்னக்ரை' வைரசை சரி
செய்வது குறித்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
ஹர்ஷவர்த்தன் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், நெல்லை சிறுமி
விஷாலினியிடம் விவாதித்தனர்.

நெல்லையைச் சேர்ந்த, கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதியின் ஒரே மகள்
விஷாலினி, 16; சிறு வயதிலேயே, மைக்ரோசாப்ட், சிஸ்கோ போன்ற நிறுவனங்களில்
தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்; 9ம் வகுப்புக்கு பின், தற்போது
பல்கலைக் கழகம் ஒன்றில், தகவல் தொழில்நுட்பத்தில், பி.டெக்., இரண்டாம்
ஆண்டு பயின்று வருகிறார்.

உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும், 'வான்னக்ரை' வைரஸ் பாதிப்பு
குறித்தும், வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர்களை, தான் சரி செய்து
தருவதாகவும், அது குறித்து, தற்போது ஆய்வில் உள்ளதாகவும்
தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
ஹர்ஷவர்த்தன், 'வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர்களை சரிசெய்து தருமாறும்,
அதற்கு என்னென்ன உபகரணங்கள், உதவிகள் தேவை' என, சிறுமி விஷாலினியிடம்
கேட்டுள்ளார்.

இதே போல, பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இருந்தும் அதிகாரிகள், மொபைலில்
தொடர்பு கொண்டு, மெயில் அனுப்ப கேட்டுக் கொண்டனர்.இத்தகவலை தெரிவித்த,
அவரது தாயார் சேதுராகமாலிகா, 'மத்திய அரசு கேட்டுக் கொண்டால், வைரஸ்
நீக்கும் பணியில் விஷாலினி ஈடுபடுவார், என்றார்

BLOG COMMENTS POWERED BY DISQUS