தொழில்நுட்பம்

உலகளவில் பாஸ்வேர்டு உபயோகம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும்
நோக்கத்துடன் உலகப் பாஸ்வேர்டு தினம் மே மாதத்தின் முதல் வியாழன் அன்று
கடைப்பிடிக்கபடுகிறது.

பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள், இமெயில், இணைய வணிகம் போன்ற
இணையம் சம்மந்தமான எல்லா விடயங்களுக்குமே பாஸ்வேர்ட் என்பது முக்கியமான
ஒன்றாகும்.

இன்று உலகளவில் பாஸ்வேர்ட் திருட்டு, இணைய ஹேக்கிங் போன்ற விடயங்கள்
அதிகம் நடைபெறுகின்றன.இதன் மூலம் நமது அந்தரங்க விடயங்கள், பதிவுகள்,
ஆவணங்கள் போன்றவைகள் திருடப்படுகிறது.நமது பாஸ்வேர்டை பாதுகாப்பது
எப்படி?

பலர் தங்களுக்கு பிடித்த பிரபலங்களின் பெயர்கள், செல்ல பிராணிகளின்
பெயர்களை பாஸ்வேர்டாக வைத்து கொள்கிறார்கள்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பகிர்வுகள் வாயிலாக உலகில் எவர்
வேண்டுமானாலும் இந்தத் தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்பதால் அவற்றைத்
தவிர்ப்பதே நல்லது.

அதே போல கடினமான பாஸ்வேர்ட்களை வைத்து கொள்கிறவர்கள், அதை மறந்து விட்டு
திணறும் விடயங்களும் அதிகம் அரங்கேறுகிறது.

தனக்குச் சுலபமானதாக பிறர் யூகிக்க கடினமானதாக இருப்பதே நல்ல
பாஸ்வேர்டுக்கான இலக்கணம் ஆகும் பாஸ்வேர்ட் மாற்றம் தேவை

பாஸ்வேர்டுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டியது
அவசியமாகும்.மேலும், இமெயில், பேஸ்புக், வங்கி உபயோகம் என அனைத்துக்கும்
ஒரே பாஸ்வேர்டுகளை உபயோகிக்கக் கூடாது.

அதிகப்படியான பாஸ்வேர்டுகளை உபயோகிப்பவர்கள் குழப்பங்களைத் தவிர்க்க
இணையத்தில் கிடைக்கும் பாஸ்வேர்ட் மேனேஜர்கள் உதவியை நாடலாம்.

இணைய திருட்டுகளை பற்றி படிக்க எத்திக்கல் ஹேக்கிங் என்ற தனி பாட பிரிவு
கூட உள்ளது.

கணினி, ஸ்மார்ட் போன்களில் உரிய ஆண்டி வைரஸ் பாதுகாப்பு அம்சங்களை
பொருத்த வேண்டும்.சமூகவலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர
கூடாது.சந்தேகத்துக்கு இடமான இணைய தளங்கள், இ-மெயில்கள், வங்கி பெயரிலான
அழைப்புகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.பொது இடங்களில் இருக்கும் வை-பை
இணையத்தின் மூலம் கூட தகவல்களை திருட முடியும் எனபதால் அதை
உபயோகபடுத்துவதை தவிர்க்கலாம்.

 

"பொன்மகள் வந்தாள்" திரைப்படத்தின் இயக்குநர் ப்ரெட்ரிக் மன்னிப்பு கோரினார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான ஜி 5 நிறுவனம் காட்மேன் என்ற வலை தொடரின் டீசர் முன்னோட்ட காட்சி வெளியாகி இருந்தது. அந்த முன்னோட்ட காட்சி யாவும் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் பிராமண சமூகத்தை இழிவு படுத்துவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வலைத்தொடர் மீது வழக்கறிஞர்கள் பலர் புகார் கொடுத்து வருகின்றனர்.

ஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.