தொழில்நுட்பம்

கூகுள் லென்ஸ் (Google Lens) என்றால் செயற்கை நுண்ணறிவுகொண்ட ஒரு கேமரா
செயலியாகும். அதாவது உங்கள் புகைப்படங்களின் வாயிலாக விபரங்களை பெறும்
வகையிலான நுட்பமாகும்.

உலகின் முன்னணி டெக் நிறுவனமாக கூகுள் நிறுவனத்தின் கூகுள்I/O 2017
டெவெலப்பர் மாநாட்டு அரங்கில் எதிர்காலத்திற்கான தனது செயல்திட்டங்கள்
குறித்து கூகுள் வெளியிட்டுள்ள செயலிகளில் மிக முக்கியமானதாக லென்ஸ்
விளங்குகின்றது.

கூகுள் லென்ஸ் என்பது ஒரு ஸ்மார்ட்போன் கேமரா ஆப் ஆகும். இதன் உதவியுடன்
நீங்கள் இதுவரை அறிந்திராத தகவலை புகைப்படங்கள் வாயிலாக அறிந்து கொள்ளும்
வகையிலான நுட்பத்தை கொண்டதாகும்.

உதாரணத்துக்கு நீங்கள் ஒரு மலர் ஒன்றை புதிதாகபார்ப்பதாக
வைத்துக்கொள்வோம், ஆனால் அதனை பற்றி எந்த விபரங்களும் நமக்கு தெரியாது.
எனவே, இது போன்ற நேரங்களில் அதனை புகைப்படமாக எடுத்து நண்பர்களிடம்
அல்லது அதுபற்றி விபரம் தெரிந்தவர்களிடம் கேட்போம், இதனையே உங்களுக்கு
கூகுள் லென்ஸ் செயலி உடனடியாக விநாடிகளில் வழங்க துனைபுரிகின்றது.

செயற்கைநுண்ணறிவு கொண்ட இந்த செயலி வாயிலாக எந்தவொரு புகைப்படத்தை
கொடுத்து தகவல்களை பெறலாம். நீங்கள் ஒரு நிறுவனத்தின் லோகோ அல்லது ஒரு
மளிகை கடையின் முகப்பு பலகை படத்தையோ கூகிள் லென்ஸ் வழியாக சோதிக்கும்
பொழுது அதுபற்றிய முழுமையான விபரங்களை பெறலாம்.

இந்தாண்டின் இறுதியில் லென்ஸ் ஆப் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட
உள்ளது.இதனை கூகுள் அறிமுகம் செய்யும் பொழுது அடுத்த தலைமுறை நுட்பங்களை
பெற எதுவாக அமையும், என டெக் உலகினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது