தொழில்நுட்பம்

உஙள் மகன் அல்லது மகளின் வயது 16. பிரபலமான மொபைல்  கேம் அப் ஒன்று அவரது நண்பர்கள் மூலம் அறிமுகமாகின்றது. விளையாடத்தொடங்குயதிலிருந்தே அந்த கேம் குழுவின் அட்மின் ஒவ்வொரு நாட்களுக்குமுரிய கட்டளைகளை தருகின்றார்.  அவற்றை தவறாமல் செய்து புகைப்படங்களை எடுத்து அனுப்பினால் அல்லது சோசல் மீடியாக்களில் சேர் செய்தாலோ விளையாடுபவருக்கான புள்ளிகள் வழங்கப்படும். இவ்வாறு மெல்ல மெல்ல தன்னிலை இழக்கும் உங்கள் பிள்ளை அடுத்துப் பயணிக்கவிருக்கும் காலம் பயங்கரமானது..

மொத்தமாக ஐம்பது நாட்கள் இந்த கேமை விளையாட வேண்டும். ஒவ்வொரு நாட்களுக்கும் ஒரு பணியை செய்யவேண்டும். 50 வது நாளில் தரப்படும் பணி இதுதான் ஒரு உயர் கட்டிடத்தில் ஏறி அங்கிருந்து குதித்து உன் வாழ்க்கையை எடுத்துக்கொள்.

ப்ளூ ஹேல் சேலஞ்ச் என்ற இந்த பயங்கரம் ரஷ்யாவில் ஆரம்பித்தது.  160 டீன் ஏஜ் வயதினர் தற்கொலை செய்து உயிரைப் பறிக்க காரணமாக அமைந்தது. அந்நாட்டின் செய்திதளத்திற்கு Reddit பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல்களிலிருந்து ஒன்றிலிருந்து ஐம்பது நாட்களுக்குமுரிய பணிகளில் சில இங்கே. ஒவ்வொன்றும் பகீர் ரகம்.


முதல் நாள்  - உங்கள் கையில் ரேஸர் "f57" மூலம் காயங்களை ஏற்படுத்தி ஒரு புகைப்படத்தை க்யூட்டருக்கு அனுப்பவும்.

இரண்டாம் நாள் - அதிகாலை 4.20  இல் எழுந்திருந்து ,க்யூட்டர் உங்களுக்கு அனுப்பும் psychedelic மற்றும் பயங்கரமான வீடியோக்களை பார்க்க வேண்டும்.


மூன்றாம் நாள் -   உங்கள் கையிலுள்ள நரம்புகளை ஒரு ரேஸர் மூலம் வெட்டி, ஆனால் மிகவும் ஆழமாக அல்ல, 3 வெட்டுக்கள், புகைப்படத்தை அனுப்ப வேண்டும்
....
ஐந்தாம் நாள்  - நீங்கள் "ஒரு திமிங்கிலம்" செய்ய தயாராக இருந்தால், உங்கள் கால் மீது "ஜெஸ்" என  இரத்ததினால் செதுக்கு இல்லையெனில், உங்களை பல முறை வெட்டி தண்டிக்க வேண்டும்.
....
பத்தாம் நாள் -  அதிகாலை 4:20 மணிக்கு எழுந்து ஒரு கூரையின் மீது ஏறுங்கள்.
....
18. ஒரு பாலத்தில் ஏறி  விளிம்பில் நிற்கவும்.

19. ஒரு கிரேனில் ஏற அல்லது குறைந்தபட்சம் முயற்சி செய்ய வேண்டும்

20. நீங்கள் நம்பகமானவரா எனக் கேட்டறிவாளாளர் சரிபார்க்கிறார

21. ஸ்கைப் பேட்டியில் "ஒரு திமிங்கலத்துடன்" (உங்களைப் போன்ற மற்றொரு வீரர் அல்லது ஒரு க்யுவேடருடன்) பேசுங்கள்.
...
24. இரகசிய பணி.
...
26. உன்னுடைய மரணத்தின் தேதியைக் கூறுவார்கள் நீ அதை ஏற்க வேண்டும்.

27. அதிகாலை 4:20 விழித்துக் கொள்ளுங்கள் மற்றும் தண்டவாளங்கள் நோக்கி நடக்க வேண்டும்.

28. நாள் முழுவதும் யாருடனும் பேச வேண்டாம்.

30-49. ஒவ்வொரு நாளும் நீங்கள் 4:20 மணிக்கு எழுந்திருங்கள், "அவர்கள்" உங்களுக்கு அனுப்பும், திகில் வீடியோக்களைப் பார்க்கவும்,  ஒரு நாளைக்கு ஒன்று வீதம் உங்கள் உடலில் வெட்டுங்கள், ஏனைய ப்ளூ ஹேலுடன் பேசுங்கள்.

50. ஒரு உயர் கட்டிடத்தில் ஏறி அங்கிருந்து குதித்து உன் வாழ்க்கையை எடுத்துக்கொள்.அட்மினால் வழங்கப்படும் இரகசிய பணிகளில் ஏனைய தற்கொலை செய்துகொள்பவர்களை வீடியோ ரெக்காட் செய்வதும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இணைய சமூகம் இவை பற்றி அறிந்துகொள்வதற்க்குள் 160 உயிர்கள் பறிக்கப்பட்டிருந்தது. முதலில் கென்ய நாட்டின் சைபர் கிரைம் பிரிவு இந்த கேமை டவுண்லோட் செய்யக்கூடிய அனைத்து இணைய இணைப்புக்களையும் நீக்கிவிடுமாறு கோரியது. அதைத்தொடர்ந்து அப் இணைப்பு கூகிள் தரவிறக்கும் இணைப்புக்கள் அனைத்தும் நீக்கப்பட்டது.

இன்ஸ்ராகிராமில் #bluewhalechallenge என்ற ஹேஷ்டேக்கில் நுழைந்தால் content advisory உள்ளடக்க அபாய எச்சரிக்கையுடனே செல்ல முடிகின்றது.


தற்போது டுவிட்டர் மற்றும் ஏனைய சமூகத்தளங்களில் இவை பற்றிய செய்திகள் அதிகமாக பரவி வருகின்றது.

இந்த பயங்கரம் பற்றி வெளியில் அவ்வளவாக தெரியாத 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளிலே அதிகமான தற்கொலைகள் இடம்பெற்றதாக ரஷ்ய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  ஆண்களை நீங்கள் தோல்வியடைந்தவர்கள் என்றும் பெண்களை பருமனானவர்கள் எனவும் கூறி டீன் ஏஜ் வயதினரை இலகுவாக தற்கொலையை நோக்கி மூளைச்சலவை செய்வதாக ரஷ்ய பொலிஸார் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

ஏனைய நாடுகளிலும் தற்போது இவை பற்றிய விழிப்புணர்வை பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த கேமை உருவாக்கிய Philipp Budeikin என்ற 21 வயதான ரஷ்யரை 2013 இலிருந்து இதுபோன்ற நிகழ்வுகளை ஒருங்கமைத்தார் என பொலிஸார் கைது செய்துள்ளனர்.  தான் சமூகத்தை சுத்தப்படுத்தவே இதை செய்ததாக Philipp Budeikin  தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இங்கிலாந்தின் பள்ளிகளில் இவை பற்றிய எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் டிவைஸ்களுடன் அல்லது கணிணியில் அதிக பட்ச நேரத்தை செலவு செய்யும் குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளின் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களை அவதானியுங்கள். அதற்காக அவர்களை சந்தேகிகப்பதாகவோ, அல்லது எரிச்சல்படுத்துவதாகவோ நடந்து கொள்ளாதீர்கள். அவர்களுடன் ஆரோக்கியமான பொழுதுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.  உங்கள் அன்பின் மிகுதியான தருணங்களாக அவை அமையட்டும்.

4தமிழ்மீடியாவிற்காக: அருண்

நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது