தொழில்நுட்பம்
Typography

ஆன்லைன் மூலம் மீன் விற்பனையை, சென்னை பட்டினப்பாக்கத்தில், நிதி மற்றும்
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் மற்றும்
அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய
ஜெயக்குமார் கூறுகையில்மீன் வகை உணவுகள் இருதய நோய் உள்பட பல நோய்களுக்கு
மருந்தாக அமைந்துள்ளது. எனவே, மக்கள் மீன் வகைகளை வாங்க வசதியாக இருக்க
வேண்டும் என்பதற்காகவே இந்த ஆன்லைன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மீன்கள் மட்டுமல்ல, மீன்கள் சார்ந்த மற்ற பொருள்களை, டெலிபோன்
மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெறலாம். www.meengal.com என்ற இணையதளம்
மற்றும் 044- 24956896 தொலைபேசி எண் மூலம் ஆர்டர் செய்யலாம் என்று அவர்
கூறியுள்ளார்.மேலும், குறைந்தபட்சம் ரூ.500க்கு ஆர்டர் செய்யலாம் என்றும்
ஆர்டர் செய்து 1⃣மணி நேரத்திற்குள் பொருட்கள் வந்து சேரும் என்றும்
கூறினார். இதற்கு போக்குவரத்து கட்டணமாக ரூ.35 வசூலிக்கப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS