தொழில்நுட்பம்

நோக்கியாவின் பழைய மாடலான 3310வின் வடிவத்தில் வெவ்வேறு கம்பெனிகள்
தங்கள் போன்களை அறிமுகம் செய்துள்ளன.

நோக்கியாவின் மிகப்பிரபலமான போன் மாடல் 3310. இன்றைய ஆண்ட்ராயிட்
காலத்துக்கு முன்னர் நோக்கியாதான் கைப்பேசி உலகின் ராஜா. நோக்கியா 3310
போனை பயன்படுத்தாதவர் மிகக்குறைவே. இதைச் சரியாக புரிந்துகொண்ட நோக்கியா
17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது பழைய மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது.
அதே வடிவம், அதே ஸ்னேக் கேம், இன்னும் கொஞ்சம் கூடுதல் அம்சங்களுடன்
விற்பனைக்கு வருகிறது நோக்கியா.

இதனிடையே நோக்கியாவின் 3310 மாடலை அப்படியே காப்பியடித்து மைக்ரோமேக்ஸ்,
டராகோ உள்ளிட்ட கைப்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் போனை விற்பனைக்கு
கொண்டு வந்துள்ளன. 3310 வடிவத்தில் இருக்கு டராகோ 3310 வெறும் 799
ரூபாய்க்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிலும் இந்த போன் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளது. மைக்ரோமேக்ஸ்
நிறுவனமும் 3310 வடிவில் X1i என்ற போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்
விலை 1399 ரூபாய்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

சென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.