தொழில்நுட்பம்

ஜூன் 5 ஆம் திகதி திங்கட்கிழமை சர்வதேச சுற்றுச் சூழல் தினம் (World Environment Day) ஆகும்.

1974 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப் பட்டு வரும் இந்தத் தினம் கடல் வளப் பாதிப்பு, மனித சனத்தொகை அதிகரிப்பு, பூகோள வெப்பமயமாதல், நிரந்தரமான நுகர்வு மற்றும் வன உயிரினங்கள் மீதான அழிப்பு போன்ற சுற்றுச் சூழல் விடயங்கள் தொடர்பில் மனித இனத்துக்கு விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வருடாந்தம் கிட்டத்தட்ட 143 நாடுகளால் அனுசரிக்கப் பட்டு வரும் இந்தச் சுற்று சூழல் தினம் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விடயங்களை கருப்பொருளாக (theme)முன்வைத்து வருகின்றது. இதன் மூலம் உலகளாவிய ரீதியில் முக்கிய கூட்டுறவு நிறுவனங்கள், NGO கள், சமூகங்கள், அரசாங்கங்கள் மற்றும் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்து சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு ஆவன செய்யப் பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் இந்த வருடம் 2017 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக 'இயற்கையுடன் மனித இனத்தைத் தொடர்பு படுத்துதல்' (Connecting People to Nature) என்பது அமைந்துள்ளது. மேலும் இவ்வருடம் சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தை வழிநடத்தும் நாடாக கனடா தெரிவு செய்யப் பட்டுள்ளது.

இதுவே கடந்த வருடம் 'சட்ட விரோத வர்த்தகத்தைத் தடை செய்வோம்' என்ற கருப்பொருளுடன் அங்கோலா நாடு இத்தினத்தை வழிநடத்தி இருந்தது. 2015 ஆம் ஆண்டு '7 பில்லியன் கனவுகள், ஒரே கிரகம், அக்கறையுடன் நுகர்வோம் ' என்ற கருப்பொருளுடன் இத்தாலி தலைமை தாங்கி இருந்தது,

சர்வதேச சுற்றுச் சூழல் தினத்துக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் : http://worldenvironmentday.global/

இன்றைய சுற்றுச் சூழல் தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக கூகுள் தேடுபொறி தனது முகப்பில்  பச்சை நிறத்தில் லோகோவை அமைத்து சிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி, தகவல் : விக்கி

நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது