தொழில்நுட்பம்
Typography

கருந்துளைகளின் மத்தியில் வோர்ம் ஹொல் (Worm hole)எனப்படும் பரவெளி அனுமான (கற்பனை) இணைப்பு காணப்படுவதாகவும் இதனால் அவை இன்னொரு  பிரபஞ்சத்துக்கான பின் வாசலாக இருக்கலாம் எனவும் வானியல் ஆய்வாளர்கள் புதிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளனர். ஒரு கருந்துளை (Black Hole) காணப்படும் பிரதேசத்தில் அதனை அண்மித்து வரும் எந்தப் பொருளும் அது ஒளியாக இருந்தாலும் அது அக்கருந்துளையின் மிக வலிமையான ஈர்ப்பினால் ஈர்க்கப் பட்டு அதன் மையத்தை நோக்கித் தள்ளப் பட்டு விடும். 

இந்நிலையில் அப்பொருள் எந்தவொரு மாற்றத்துக்கும் உள்ளானாலும் பின்னர் அதே நிலையில் முற்றிலும் வித்தியாசமான ஓர் பிரதேசத்துக்கு அல்லது விசேடமான பிரபஞ்சத்துக்கு சென்று விடும் என இப்போது கூறப்படுகின்றது. இதற்கு முன் கருந்துளைக்கு உள்ளே போகும் எப்பொருளும் இனிமேல் திரும்பவே முடியாது என்றும் அவை எப்போதும் தொலைந்து போன ஒரு பொருளாகவே இருக்கும் என்ற கருதுகோளே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது கருந்துளைக்கு உள்ளே மத்தியில் இருக்கும் Worm Hole ஆனது ஒரு பின்புற வாசலாகத் தொழிற்பட்டு  கருந்துளையில் சிக்கி விடும் பொருட்கள் அனைத்தையும் இன்னொரு பிரபஞ்சத்துக்கு கடத்தி விடும் என புதிய கல்வி  மூலம் கூறப்படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS