Saturday, May 25th

Last update10:29:13 AM

ஜிமெயிலில் சில மின்னஞ்சல்கள் கிடைக்கவில்லையா? அவை Spam பால்டருக்கு சென்றிருக்கலாம்!

4தமிழ்மீடியாவின் மின்னஞ்சல் வாசகர் Kaliappan Ramalingam தனக்கு நான்கு நாட்களாக செய்திகள் கிடைக்கவில்லை என்பதை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

 

இதேபோன்று ஏனைய சிலருக்கும் 4தமிழ்மீடியா செய்திகள் கிடைக்கவில்லை என்பதை அறிந்தபின்னர் இவற்றிற்கு தீர்வாக சில தகவல்கள் இங்கே.

முதலில் ஜிமெயிலில் Spam என்ற பால்டருக்கு சென்று அங்குள்ள 4தமிழ்மீடியாவின் மின்னஞ்சலை திறந்த பின்னர், மேலே Not Spam என்பதை ஒருமுறை அழுத்துங்கள்.

மேலும் அண்மையில் ஜிமெயில் ஸ்பாமிங்க் மெயில்களை தடை செய்ய சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இவை தொடர்பான சில தகவல்கள்.

குறிப்பாக சந்தேகப்படும்படியான மின்னஞ்சல் எனத் தெரிந்தால் அவற்றின் மேலே
"This message could be a scam"  என்ற அறிவுறுத்தலை சிவப்பு நிறத்தில் காட்டுமாறு செய்கின்றது.

இவை மீண்டும் மீண்டும் வருமாறு புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் ஸ்பாம் அல்லாத மின்னஞ்சல் என நீங்கள் கருதினால் உடனே
 Ignore, I trust this message  என்ற ஆப்ஸனை தெரிவு செய்யுங்கள்.

ஸ்பாம் மின்னஞ்சல் எனில் Report this suspicious message என்பதை அழுத்தவேண்டும்.
இவை தொடர்பான மேலதிக விடயங்கள் கூகிளின் ஜிமெயில் உதவி பகுதியில் இங்கே

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus