இணையத்தளங்கள் பாதுகாப்பானவைதான் என்பதை கண்டுபிடிப்பது எவ்வாறு?
- Monday, 08 October 2012 12:02
4தமிழ்மீடியாவின் செய்திகளை தினமும் மின்னஞ்சல் மூலமாக படிப்பவர்கள் தங்களுக்கு கடந்த சில நாட்களாக செய்திகள் வரவில்லை என முறைப்பாடு செய்திருந்தனர்.
இதையடுத்து எமது தளத்தின் தொழில்நுட்ப பிரிவினர் இவை தொடர்பில் ஆராய்ந்த போது ஸ்பாம் மின்னஞ்சல்களை கண்டறியும் தளங்கள் சில (http://www.antiphishing.org/ , http://www.stopbadware.org/ , http://www.surbl.org/ , http://zulu.zscaler.com/ ) போன்றவை 4தமிழ்மீடியாவையும் ஸ்பாமென தவறுதலாக தடை செய்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவர்களை உடனடியாக தொடர்புகொண்டு இது தவறான கணிப்பு என்பதையும் அதற்கான ஆதாரங்களையும் ( https://www.virustotal.com/ , http://www.avg.com.au , http://sitecheck.sucuri.net/scanner/ ) போன்ற தளங்களிலிருந்து கொடுத்தபின்னர் தவறுதலாக முடக்கப்பட்ட முகவரிகள் அவ்வாறான தளங்களிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளன.
எனவே இனி எமது வாசகர்கள் தடையின்றி மின்னஞ்சல்களைப் பெறுவார்கள் என்பதை அறிவிக்கின்றோம்.
எனினும் சிலருக்கு அவ்வாறு கிடைக்காதிருப்பின் தயவு செய்து உங்கள் மின்னஞ்சல் சேவையின் Spam பால்டர் அல்லது Junk பால்டர் சென்று அங்கே 4தமிழ்மீடியாவின் மின்னஞ்சல்கள் ஸ்பாம் அல்ல என்பதை ஆப்ஸன் மூலம் தெரிவு செய்யுங்கள்.
ஜிமெயிலில் இவ்வாறு நடந்த மாற்றங்கள் தொடர்பில் முன்னர் அறிவித்திருந்தோம்.
இவை தொடர்பில் உதவிகள் வேண்டுமாயின்
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
என்ற முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள்.
உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி! தொடர்ந்து 4தமிழ்மீடியாவுடன் இணைந்திருங்கள்.
- 4தமிழ்மீடியா குழுமம்
