ஆரோக்கிய சமையல்:பாகற்காய் மஞ்சூரியன்
- Friday, 14 September 2012 04:12
வாரந்தோறும் ஆரோக்கிய உணவுவகைளை எவ்வாறு தயார் செய்யலாம் என்பதனை
4தமிழ்மீடியா வாசகர்களுக்குச் சுருக்கமாக சொல்லித் தரும் சென்னைகிழக்கு கடற்கரை சாலை மிட்வே ஸ்டார் ஹோட்டலில் பிரதான சமையற் கலைஞர்களான காதர்பாயும், இக்பால்கானும் ஆரோக்கிய உணவுவகைகளின் வரிசையில் அவர்கள் இவ்வாரம் அறியத் தருவது
பாகற்காய் மஞ்சூரியன்
தேவையானவை; பாகற்காய்-கால்கிலோ,
மைதா,க.மாவு, சோளமாவு,-தலா 50 கிராம்,
மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன்,
லெமன் ஜூஸ்-அரை டீஸ்பூன்,
வெங்காயம்,தக்காளி-தலா ஒன்று,
இஞ்சி,பூண்டு பேஸ்ட்-அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள்-ஒரு சிட்டிகை,
மிளகாய்த்தூள்-அரை டீஸ்பூன்,
உப்பு,எண்ணெய்-தேவையான அளவு.
செய்முறை: பாகற்காயை வில்லைகளாக வெட்டி ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.சோளமாவு, மைதாமாவு, கடலை மாவு, மிளகாய்த் தூள், லெமன் ஜூஸ், உப்பு சேர்த்து பகோடா மாவுபோல் பிசைந்து, பாகற் காயை சேர்த்துப் பிசறி எண்ணெயில் பொறித்து வைத்துக் கொள்ளவும். பின் வாணலியில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும். பின் பொரித்த பாகற்காயைப் போட்டு கிளறி இறக்கவும்.
குறிப்பு; பாகற்காயை ஆவியில் வேகவைத்து செய்வதால் கசப்பு சுவை தெரியாது.
4 தமிழ் மீடியாவுக்காக: ஒருங்கிணைப்பு எழில்செல்வி, படங்கள் எழில் சூர்யா.
