ஆரோக்கிய சமையல் : மிக்ஸ்ட் வெஜிடபுள் புலாவ்
- Wednesday, 26 September 2012 10:09
ஆரோக்கிய சமையலில் இம் முறை மிக்ஸ்ட் வெஜிடபுள் புலாவ்வினை
4தமிழ்மீடியாவின் வாசகர்களுக்காகச் செய்து காண்பித்து இருக்கிறார், பிரபல அஞ்சப்பர் உணவகத்தின் உரிமையாளர் மகள் வள்ளியம்மை ராஜகோபால்.
மிக்ஸ்ட் வெஜிடபுள் புலாவ்
தேவையானவை:
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, பீட்ரூட், காலி பிளவர், உருளைக் கிழங்கு போன்ற உங்களுக்குப் பிடித்தமான காய்கறிகள் மொத்தமாக ஒரு பெரிய கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2
தனியா தூள்:கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள்:அரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது:2 டீஸ்பூன்,
நறுக்கிய தக்காளி:1 ,
கொத்துமல்லி, புதினா, பிரிஞ்சி இலை: சிறிதளவு,
எண்ணெய்:2 டேபிள் ஸ்பூன்,
பாசுமதி அரிசி:கால் கிலோ,
தயிர்:50 எம்எல்,
உப்பு:தேவையான அளவு.
செய்முறை: பாசுமதி அரிசியை நன்கு களைந்து விட்டு, தண்ணீரை நீக்கி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அனைத்துக் காய்கறிகளையும் சுத்தமாகக் கழுவி, பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயில் வெங்காயம், தக்காளி இரண்டையும் நன்கு வதக்கவும். பின்னர் இத்துடன் நறுக்கி வைத்த காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். அதனுடன் மல்லி, புதினா இலைகள், பிரிஞ்சி இலை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சேர்த்து எண்ணெய் விட்டு சுருள வதக்கவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும். பின்னர் தயிர் சேர்த்துக் கிளறவும். இதனுடன் ஊறவைத்த பாசுமதி அரிசியையும் சேர்த்து 2 தம்ளர் தண்ணீர் விட்டு, பிரஷர் குக்கரில் குக் செய்யவும். 3 விசில் வந்ததும் இறக்கி விடவும்.
கடைசியாக பரிமாறும் போது நெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி பரிமாறவும். குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவு. வயதானவர்கள் நெய் குறைத்து, எண்ணெய் குறைத்து செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமான உணவு இது.
காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும் இந்த புலாவை விரும்பி சாப்பிடுவார்கள்.
- 4தமிழ்மீடியாவுக்காக: படங்களுடன் எழில்செல்வி
மேலும் சில ஆரோக்கிய சமையல் குறிப்புகளை இங்கே அழுத்திக் காணலாம்
