வினோதம்

ஐரோப்பாவின் பெல்ஜியம் நாட்டில் கண் கவர் சாக்லெட் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதில் 40 இற்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்களால் 50 இற்கும் அதிகமான சாக்லெட் விலங்குகள் சிறிதாக அல்லாது அதன் நிஜப் பருமனுக்கு நிகராகவே கிட்டத்தட்ட 3 மீட்டர் உயரத்துக்கு செய்யப் பட்டு பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.

புருஸ்ஸெல்ஸுக்கு தென் கிழக்கே உள்ள சிறிய நகரமான டுர்புய் இல் தான் இந்த சாக்லெட் திருவிழா இடம்பெற்று வருகின்றது. இதுவரை இந்தத் திருவிழாவுக்கு 30 000 இற்கும் அதிகமான மக்கள் வந்து சென்றுள்ளனர். முக்கியமாக ஈஸ்டர் பண்டிகையை இலக்காக வைத்து நடைபெற்று வரும் இந்த சாக்லெட் திருவிழா ஏப்பிரல் 8 ஆம் திகதி வரை நடைபெறத் திட்டமிடப் பட்டுள்ளது. வெறும் 10 000 பொது மக்களே வசிக்கும் டுர்புய் நகரம் உலகின் மிகச் சிறிய நகரங்களில் ஒன்றாகும். இந்த சாக்லெட் திருவிழாவில் சாக்லெட் அருவி, மிகப் பெரிய விலங்குகளான யானை மற்றும் கிங் காங்க் குரங்கு என்பனவும் வடிவமைக்கப் பட்டுள்ளன.

இவ்வருடம் சாக்லெட் திருவிழா இலட்சக் கணக்கான மக்களை ஈர்க்கும் என ஏதிர் பார்க்கப் படுகின்றது.