இங்கிலாந்து இளவரசர் ஹரி விண்ட்சர் கேஸ்ட்லில் அமெரிக்க நடிகையான 36 வயதுடைய மேகன் மார்க்கெல் என்பவரைத் இன்று திருமணம் செய்யவுள்ளார். இதன் நேரடி ஒளிபரப்பை அரசகுடும்ப உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பாகின்றது.
இங்கிலாந்து அரச குடும்பத்தில் சார்ல்ஸ் டயானா தம்பதியினரின் 2 ஆவது மகன் 33 வயதாகும் ஹரி ஆவார்.
இத்திருமணத்துக்கான செலவு, சங்கீதம், சேவை, பூங்கொத்துக்கள் மற்றும் ரிசெப்சன் என அனைத்து செலவுகளையும் அரச குடும்பம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.