வினோதம்
Typography

தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங்க் குகைக்குள் கடந்த 18 நாட்களாக சிக்கிக் கொண்டிருந்த 12 சிறுவர்களையும் அவர்களது பயிற்சியாளர்களையும் மீட்கும் பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்த இக்குகைக்குள் இச்சிறுவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கொண்டு சென்ற கடற் படை வீரர் ஒருவர் மாத்திரம் தான் குறுகலான பாதையில் சிக்கி ஆக்ஸிஜன் முடிவடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் மழை வெள்ள நீர் சூழ்ந்து கொண்ட இக்குகைக்குள் இருந்து 13 பேரையும் எவ்வாறு மீட்பது என்பது குறித்து டைவிங் மற்றும் நீச்சலில் தேர்ச்சி பெற்ற பன்னாட்டு மீட்புக் குழுவினர் ஆலோசித்தனர். முதற் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை இந்த 13 பேரிலும் 4 சிறுவர்களை பத்திரமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் நீச்சல் உதவியுடன் அழைத்து வந்தனர். இவர்கள் உடல் நலத்துடன் வைத்திய சாலைக்கு உடனே கொண்டு செல்லப் பட்டனர். எதிர் பார்த்ததை விட இந்த மீட்புப் பணி சற்று சுலபமாக இருந்ததால் அடுத்த கட்ட மீட்புப் பணி திங்கள் இடம்பெற்றதுடன் இதன் போதும் 4 பேர் பத்திரமாக அழைத்து வரப் பட்டனர்.

இன்று செவ்வாய்க்கிழ்மை அடுத்த கட்டமாக 3 சிறுவர்களும் இறுதியாக சிக்கி இருந்த ஒரேயொரு சிறுவனும் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப் பட்டனர். மிகவும் துரிதமாக செயற்பட்டு தாய்லாந்து அரசு இச்சிறுவர்களை மீட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது மீட்கப் பட்டுள்ள அனைத்து சிறுவர்களும் பயிற்சியாளர்களும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அங்கு சில வாரங்களாவது தங்கி இருக்க வேண்டும்  எனத் தெரிவிக்கப் பட்டுள்ளதால் இவர்கள் ஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்க்க ரஷ்யாவுக்குச் செல்ல மாட்டார்கள் என்று தெரிய வருகின்றது.

இச்சிறுவர்கள் அகப்பட்டுக் கொண்ட சியாங் ராய் மாகாணத்திலுள்ள இக்குகைக்குத் தற்போது தாய்லாது பாதுகாப்புப் படை சீல் வைத்து மூடியுள்ளது. இந்த ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்தது குறித்து தாய்லாந்தின் கடற்படை SEAL  அமைப்புக் கருத்துத் தெரிவிக்கையில் தமக்கு இது ஒரு அற்புதமா அல்லது விஞ்ஞானத்தின் வெற்றியா அல்லது வேறு ஏதும் காரணியா என்று சொல்லத் தெரியவில்லை என்றுள்ளது. இதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரேசே மே உட்பட பல உலகத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்