வினோதம்

பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கமெரூனின் இயக்கத்தில் 1997 ஆமாண்டு வெளிவந்த டைட்டானிக் திரைப்படத்தை யாரும் எளிதில் மறக்க முடியாது.

இத்திரைப்படத்தில் காட்டப் பட்ட கப்பல் உண்மையில் 1912 ஆமாண்டு அத்திலாந்திக் கடலில் மூழ்கிய பிரிட்டனின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாகும்.
.
இந்தக் கப்பலுக்கு இணையாகக் கட்டப் பட்ட புதிய டைட்டானிக் 2 கப்பல் 2022 ஆமாண்டு முதல் பாவனைக்கு வரவுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரான க்லைவ் பால்மெரின் இனது செலவில் சீனக் கப்பல் தயாரிப்பு நிறுவனமான CSC ஜின்லிங் ஷிப்யார்ட் இனது தயாரிப்பில் இந்த டைட்டானிக் 2 கட்டமைக்கப் பட்டுள்ளது. 2012 ஆமாண்டு இதன் தயாரிப்புப் பணி அறிவிக்கப் பட்டது.

பழைய கப்பலை விட 10 000 டன் அதிகமாக மொத்தம் 56 000 டன் நிறை கொண்ட இந்த டைட்டானிக் 2, 2016 ஆமாண்டே பாவனைக்கு வரவிருந்த போதும் சில ஒப்பந்தச் சிக்கல்களால் இதன் கட்டுமானம் பின்னுக்குப் போயுள்ளது. புதிய டைட்டானிக் கப்பலை அறிமுகப் படுத்தும் வைபவம் சீனாவின் மக்காவு, நியூயோர்க், கனடாவின் ஹலிஃபாக்ஸ், இலண்டன் மற்றும் சௌதாம்ப்தன் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளத் திட்டமிடப் பட்டுள்ளது.

பழைய டைட்டானிக் கப்பல் தான் அக்காலத்தில் உலகின் மிகப்பெரிய கப்பலாகும். இது விபத்தில் சிக்கிய போது அதில் பயணித்த 2224 பயணிகளில் 1500 இற்கும் அதிகமான பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்றும் நவீன உலகின் மிக மோசமான கப்பல் விபத்தாகக் கருதப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.