வினோதம்

மார்பக புற்றுநோய் குறித்த பல்வேறு அறிகுறிகளை அடையாளம் காண உதவும் வகையில் எழுமிச்சை பழங்களை பயன்படுத்தியுள்ளனர்.

பெண்களுக்கு வரக்கூடிய நோய்களில் மார்பக புற்றுநோய் குறித்த அறிகுறிகளை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம்.
பல ஆண்டுகளாக, உலகளாவிய மார்பக புற்றுநோய் "மார்பக புற்றுநோய் குறித்த பிரச்சாரத்தை தீவிரமாக மாற்றியமைக்கும்" நோக்கத்தில் செயல்பட்டுவருகிறது. இதற்காக இலாபநோக்கற்ற அமைப்பு ஒன்று "உங்கள் எழுமிச்சை கனிகளை அறிந்துகொள்ளுங்கள்" எனும் கரும்பொருளில் சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளது.

மார்பக புற்றுநோய் குறித்த முக்கிய 12 அறிகுறிகளை அடையாளம் காண உதவும் வகையில் எழுமிச்சை பழங்களை பயன்படுத்தி இந்த சுவரொட்டிகளை வடிவமைத்துள்ளனர்.

அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மார்பகங்களாக எலுமிச்சைகனிகள் உள்ள அட்டைப்பெட்டியை ஒப்பிட்டு, ஒவ்வொரு கனியும் ஒவ்வொரு அறிகுறியை விளக்கம் வகையில் உள்ளது. மார்பகத்தில் ஏற்படும் புடைப்புகள், கட்டிகள், நிறம் வடிவங்களில் குறைவான வெளிப்படையான மாற்றங்கள் என அடங்குகிறது. இப்படங்களின் பயன்பாட்டின் மூலம் இந்த அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக விளக்குவதன் மூலம், மக்களுக்கு ஆரோக்கியம், தனிப்பட்ட ஆபத்து மற்றும் நோய் கண்டறியப்படுதல் ஆகியவற்றின் போது அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்குமென தெரிவிக்கின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு இணையத்தளம் மற்றும் செயழி ஒன்றும் இந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.