வினோதம்

இன்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 3 ஆம் திகதி ஐ.நா சபையால் பிரகடனப் படுத்தப் பட்ட உலக வன உயிரிகள் தினமாகும்.

(World Wildlife Day 2019) இவ்வருடம் வன உயிரிகள் தினத்தின் தீமாக (Theme) நீருக்கடியில் உயிர் வாழ்க்கை (Life below Water) என்பது அமைந்துள்ளது. இதனால் இவ்வருடம் கடலடி உயிரினங்களது அழிவை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப் படுகின்றது.

இது தொடர்பில் ஐ.நா இன் இணையத் தளத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதாவது நமது பூமியில் உள்ள சமுத்திரங்கள் மற்றும் அதன் வெப்பநிலை, இரசாயனம், வாழ்க்கைக் கூறுகள் என்பவை தான் பூகோளப் பொறிமுறையிலும் ஆதிக்கம் செலுத்தி எமது பூமி மனிதர்களும் வாழ ஏற்றது என்ற வகையைச் செய்துள்ளது என்பது முக்கியமானதாகும். இதை நாம் எவ்வாறு பயன்படுத்தி நாம் மட்டுமன்றி ஏனைய உயிரினங்களும் அழிவடையாது வாழ உதவுகின்றோமோ (உதாரணத்துக்கு கால நிலை மாற்றம்) அந்தளவுக்கு பூமி உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தொடர்ந்து வழி செய்து கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 3 பில்லியன் மக்களது வாழ்க்கை கடல் மற்றும் கடற்கரைகளில் உள்ள உயிர்ப் பல்வகைமையில் தங்கியுள்ளதாம். ஆனால் நிகழ்காலத்தில் சமுத்திரங்களில் இருக்கும் 30% வீதமான மீனினங்கள் மனிதனால் ஏற்படுத்தப் படும் சுற்றுச் சூழல் மாசினால் பாதிக்கப் படுகின்றன. இப்பாதிப்பு எம்மையும் தாக்கக் கூடியதே. ஏனெனில் கடல் வாழ் மீன்பிடி மற்றும் ஏனைய வளங்கள் தொடர்பான தொழில்துறையால் வருடாந்தம் உலகளாவிய ரீதியில் குறைந்தது $3 டிரில்லியன் பெறுமதியுடையதாம். இது பூகோள GDP இல் 5% வீதமாம்.

எனவே நாம் ஒவ்வொருவரும் இணைந்து கடல் மாசடவைத் தடுக்க முயன்றால் மாத்திரமே எமது வருங்காலத் தலைமுறைகளுக்கும், பூமியின் உயிர் வாழ்க்கைக்கும் ஆபத்து ஏற்படாது உயிர் வாழ முடியும் என்பதை உணர்ந்து செயற்படுவோம்.