வினோதம்

அமெரிக்காவில் பெண்ணொருவர் மிக மிக அரிதான வகையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

அதுவும் 9 நிமிடத்தில் இந்த 6 குழந்தைகளையும் பெற்றுடுத்து அதன் பின்னும் பூரண உடல் நலத்துடன் அனைவரையும் மேலும் திகைக்க வைத்துள்ளார். பிறந்த 6 குழந்தைகளில் 2 பெண் குழந்தைகளும் 4 ஆண் குழந்தைகளும் அடங்குகின்றனர்.

இக்குழந்தைகளின் எடை 1 பவுன்ட்ஸ் 12 அவுன்ஸில் இருந்து 2 பவுன்ட்ஸ் 14 அவுன்ஸ் வரையில் காணப் படுகின்றது. அனைத்துக் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ள போதும் அதனை மேலும் உறுதிப் படுத்தத் தற்போது குறித்த வைத்திய சாலையின் நியோநட்டல் எனப்படும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப் பட்டுள்ளனர்.

உலகில் இது போன்று ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறப்பது என்பது 4.7 பில்லியன் பிரசவங்களில் ஒரு பிரசவத்தில் தான் என்ற வீதத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் ஹௌஸ்டன் மாநிலத்தில் தெல்மா கியாக்கா என்ற பெண்ணுக்கே கடந்த வெள்ளிக்கிழமை இந்த 6 குழந்தைகளும் பிறந்துள்ளன. இதுவரை இந்தத் தாயார் தனது இரு பெண் குழந்தைகளுக்கு மாத்திரம் ஷினா மற்றும் ஷுரியெல் எனப் பெயரிட்டுள்ளார். ஏனைய 4 ஆண் குழந்தைகளுக்கும் பெயரிட யோசித்துக் கொண்டிருக்கின்றார்.