வினோதம்
Typography

அண்மையில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவிற்கு நடிகை நடாலி போர்ட்மேன் அணிந்து வந்திருந்த ஆடையில் சில பெண் இயக்குநர்களின் பெயர்களை எம்ப்ராய்டரி செய்யப்பட்டிந்தது அனைவரினது பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் அந்த ஆடைக்கு பின்னால் ஒரு தெரியாத அர்த்தம் புரியவைக்கப்பட்டது எனலாம்.

சிறந்த இயக்குநர்கள் பிரிவில் பெண்களுக்கான அங்கிகாரம் இல்லை என்பது ஒரு வெளிப்படையான புறக்கணிப்பு.

புதிய தசாப்தில் மேலத்தைய சினிமா அகாடமி மதிப்புமிக்க ஆண்களை மட்டுமே கௌரவமாக பரிந்துரைத்தது. அதே வருடத்தில் பெண் இயக்குநர்கள் மிகவும் பிரியமான மற்றும் சுவாரஸ்யமான சில படங்களைத் தயாரித்தபோதும்கூட பரிந்துரைக்கப்படாதது வேதனை அளித்தது. பலரை போலவே நடிகை நடாலி போர்ட்மேனும் வருத்தப்பட்டார். ஆனால் அதோடு நிறுத்திவிடமால் துணிந்து வெளிப்படையாக தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.

அதற்கு அவர் பயன்படுத்திக்கொண்டது சிவப்புகம்பளை ஆடைநாகரிகம். நடிகை நடாலி ஆஸ்கார் விருது விழாவிற்கு கருப்பு மற்றும் தங்க நிற டியோர் வகை உடை அணிந்து அதனுடன் ஒரு கேப் (மேலங்கி) ஒன்றையும் சேர்த்துக்கொண்டார். அந்த மேலங்கியின் இடதுபுற விளிம்பிள் சில பெண் இயக்குனர்களின் பெயர்களை எம்ப்ராய்டரி செய்திருந்தார். அப்பட்டியலில் ஹாரிபோட்டர் புகழ் எம்மா வாட்சன் நடித்திருந்த தி லிட்டில் வுமன் திரைப்பட இயக்குனர் கிரெட்டா கெர்விக்(Little Women, Greta Gerwig), தி பிராரவேல் படத்தை இயக்கிய லுலு வாங் (The Farewell, Lulu Wang) மற்றும் ஹஸ்டலர்ஸின் இயக்குனரான லோரன் ஸ்கஃபாரியா ( Hustlers, Lorene Scafaria) என சில முக்கிய பெண் இயக்குனர்களின் பெயர்கள் "தங்கவிருது" பெற்று ஆஸ்கர் சிகப்பு கம்பளையில் ஜொலித்துக்கொண்டது.

"இந்த ஆண்டு பல நம்பமுடியாத படைப்புக்களை படைத்தமைக்காக அங்கீகரிக்கப்படாத பெண்களை எனது நுட்பமான முறையில் அங்கீகரிக்க நான் விரும்பினேன்" என தனது ஆடைக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை நடாலி போர்ட்மேன்.

போர்ட்மேன் தொழில்துறை உறுப்பினர்களிடம் தனது அதிருப்தியை மிகவும் பொது வழியில் குரல் கொடுத்தது இதுவே முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டில், கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை (ரான் ஹோவர்டுடன்) இணைந்து வழங்கினார், அச்சமயம் பெயர்களை அறிவிக்க நேரம் வந்தபோது, "இதோ அந்த 'அனைத்து ஆண்' வேட்பாளர்களின் பெயர்கள்..." என்று கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

மூலம் : mymodernmet

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்