வினோதம்

வெகு விரைவில் அறிமுகமாகவுள்ளது ஆன்டுரோய்டு இயங்கு தளத்தில் பல்வேறு வசதிகளுடன் செயற்படும் சூப்பர் பைக் என அழைக்கப் படும் துவிச்சக்கர வண்டி.

இந்த சைக்கிளின் முகப்பில்  Display உடன் திருடர்களிடம் இருந்து பாதுகாக்க கைரேகை ஸ்கேனர் மூலம் லாக் செய்யும் வசதி மற்றும் லேசர்கள் மூலம் சொந்தமாக சைக்கிள் செல்லும் பாதைகளை உருவாக்குதல் போன்ற வசதிகள் உள்ளன. நமது  மாபைல் ஆப்களுடன் இணைக்கக் கூடிய 4 இஞ்ச் டிஸ்பிளே இந்த சைக்கிளில் உள்ளது. மேலும் இதில் முன்னால் இரு பக்கமும் சிக்னல்களில் திரும்புவதற்கு வசதியாக ஹேண்டில் பாரில் இருபக்க ஒளிவிளக்குகள் காணப் படுகின்றன. இதை விட அலார்ம் சிஸ்டம், மின்சாரம் மூலமாக பார்க் பண்ணக் கூடிய பிரேக் மற்றும் கைரேகை ஸ்கேனர் என்பனவும் உள்ளன.

மேலும் சைக்கிள் ஓட்டும் போது எமது இருதயத் துடிப்பின் வேகத்தை அளவிடும் மானிட்டர் உட்பட முக்கியமான சில சென்சார்கள் உள்ளன. இண்டர்கோம் மூலமாக ஹேண்ட்ஸ் ஃப்ரீ வகை தொடர்பாடல் மூலம் தொலைபெசி அழைப்புக்களை அனுமதிக்க முடியும். GPS வசதியுடன் கூடிய நேவிகேஷனும் இதில் காணப் படுகின்றது. LeEco நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டு சந்தைக்கு வரவுள்ள இந்த சைக்கிள் வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப் படுகின்றது.