வினோதம்
Typography

இரு தினங்களுக்கு முன் 26.02.2020 அன்று திருநெல்வேலி மாவட்டத்தின் துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் IAS-க்கு திருமணம் நடந்தது. பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு இடையே ஐஏஎஸ் பரிச்சையில் தேறி அதிகாரியாகவும் ஆனார்.

பிறகு பெற்றோரின் ஏற்பாட்டை ஏற்று திருமணம் செய்ய வேண்டிய நிலையில்,பல படித்த பெண்களும் IAS,IPS,IRS,தேர்விகளில் வென்று அரசுப்பணிகளில் இருக்கும் பெண்களும் மணமகளாய் வர தயாராக இருந்துள்ளனார். ஆனால் சிவகுரு பிரபாகரன் ஒரு மருத்துவரை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்துள்ளார்.

அவருடைய பெற்றோர்கள் மருத்துவம் படித்த மணப் பெண்ணை கடந்த ஓராண்டு காலமாக தேடி வந்த நிலையில் பல டாக்டர் வரண்கள் கிடைத்தும், இவருடைய வரதட்சனை நிபந்தனையைக் கேட்டு அனைவரும் ஓட்டம் பிடித்துள்ளனர். கடைசியாக சென்னை நந்தனம் கல்லூரியில் கணித பேராசிரியரியராக பணியாற்றி வருபவரின் மகளும் மருத்துவருமான டாக்டர் கிருஷ்ணபாரதி எம்.பி.பிஎஸ், சிவகுரு கேட்ட வரதட்சனை நிபந்தனைக்கு சம்மதித்து திருமணத்துக்கு ஒப்புதலளித்ததை அடுத்து திருமணம் நடந்ததுள்ளது.

அப்படி என்னதான சிவகுரு வரதட்சனையாகக் கேட்டார்? ‘தன்னை திருமணம் செய்துகொள்ளும் மருத்துவர், வாரத்தில் இரண்டு நாள், நான் பிறந்து வளர்ந்த ஒட்டங்காடு கிராமத்திற்கும் சுற்றியிருக்கும் கிராமத்திற்கும் இலவசமாய் மருத்துவம் பார்க்க வேண்டும்’ என்பதையே நிபந்தனையாகவும் வரதட்சனையாகவும் இவர் கேட்டிருக்கிறார். இதனால் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருந்திருக்கிறது. இப்போது சிவகுரு - கிருஷ்ணபாரதி தம்பதியை ஊரே பாராட்டிக்கொண்டிருக்கிறது

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்