வினோதம்

நம்மில் வயதானவர்கள் மட்டுமன்றி இளவயதினருக்கும் ஏற்படும் dementia என்ற மனச்சோர்வு நோயைப் பெருமளவுக்குப் போக்கும் சக்தி நாம் அருந்தும் கஃபே (Coffee) பானத்துக்கு உள்ளது என நவீன ஆய்வில் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

தினமும் இரண்டு கோப்பை கஃபே அருந்துபவர்களுக்கே 36% வீதமான மனச்சோர்வு தடுக்கப் படுகின்றது என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

தினமும் கஃபே அருந்தி வரும் 65 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளிடம் கஃபேன் (caffeine) எனப்படும் மூலக்கூறு எந்தளவு உள்ளது என்று ஆராயப் பட்டது. இதன் போது தினமும் 261 மில்லிகிராம் கஃபே அருந்தும் பெண்களுக்கு dementia நோய் 10 வருடம் பின் தள்ளிப் போடப் படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த அளவானது தினமும் இரண்டு கோப்பை கஃபே அல்லது 6 கோப்பை கரும் தேநீர் (black tea) அருந்துவதற்கு சமமாகும். இந்த ஆய்வு உறுதி செய்யப் பட்ட போதும்  கஃபேன் என்ற போதை வஸ்து ஏன் dementia ஐத் தடுக்கின்றது என நிபுணர்களுக்கு இன்னமும் தெளிவாகப் புரியவில்லை.

Wisconsin-Milwaukee என்ற பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்களால் 65 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6467  பெண்மணிகளிடம் மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வில் அவர்கள் தினமும் அருந்தி வரும் கஃபே, தேநீர் மற்றும் கோலா ஆகியவற்றின் அளவு  குறித்த கணிப்பீடு பெறப்பட்டது. கஃபேன் மற்றும் dementia நோய் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பு  மூளையிலுள்ள செல்கள் பற்றிய ஆய்வில் முக்கிய பங்கு வகிப்பதால் இது தொடர்பான ஆய்வு இன்னமும்  முடுக்கி விடப் பட்டுள்ளது.

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது