வினோதம்

 நமது பிரபஞ்சத்தில் பால்வெளி அண்டத்தில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள நட்சத்திரம் ப்ரொக்ஸிமா செண்டூரி (Proxima Centaury) ஆகும். இவ்வருடத் தொடக்கத்தில் பூமியில் இருந்து 4 ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ள இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வரும் 'ப்ரொக்ஸிமா பீ' (Proxima b) என்ற கோள் பூமிக்கு ஒப்பானது என்றும் இதில் நமக்கு நிகரான உயிரினங்கள் வாழும் சாத்தியம் உள்ளது என்றும் வானியலாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

 தற்போது இவர்கள் புதிதாகக் கூறும் கருத்து என்னவென்றால் சிவப்புக் குள்ள நட்சத்திரமான (Red dwarf) ப்ராக்ஸிமா செண்டூரி மிகவும் சூரியனுக்கு ஒப்பான நட்சத்திரம் என்பதாகும். சூரியன் தன்னை ஒருமுறை சுற்ற 11 புவி வருடங்கள் எடுக்கும் நிலையில் ப்ராக்ஸிமா செண்டூரி தன்னைச் சுற்றி வர 7 புவி வருடங்கள் எடுப்பதாகவும் கணிக்கப் பட்டுள்ளது. சூரியன் தனது மேற்பரப்பில் கரும் பொட்டுக்களை (dark spots) வெளிப்படுத்துவது போல ப்ராக்ஸிமா செண்டூரியும் மிக அடர்த்தியான நட்சத்திர ஒளிப் பொட்டுக்களை (Star spots) வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.

நமது பூமி  ஒரேயொரு நட்சத்திரமான சூரியனைச் சுற்றி வரும் நிலையில் 4 ஒளியாண்டுத் தூரத்தில் உள்ள Proxima b என்ற கிரகம்( 2 ஆவது பூமி)  அல்ஃபா செண்டூரி (Alpha Century) என்ற நட்சத்திரத் தொகுதியைச் சேர்ந்த 3 சிறிய நட்சத்திரங்களை சமச்சீரான ஒழுக்கில் சுற்றி வருகின்றது என்றால் ஆச்சரியப் படுவீர்கள். இதனால் இதன் மேற்பரப்பில் பூமியைப் போல் கடல்களும் உயிர் வாழ்க்கைக்கு ஏற்றதான சூழலும் காணப்படும் வாய்ப்புள்ளது என வானியலாளர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். Proxima b சுற்றி வரும் தாய் நட்சத்திரமான ப்ராக்ஸிமா செண்டூரி சூரியனுக்கு ஒப்பானது என்பதால் அக்கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான வளிமண்டலத்தைப் பேணும் கதிர்களையும் கதிர்ப் புயல்களையும் அது Proxima b இற்கு வழங்கி வரும் எனப்படுகின்றது.

 தகவல் : Mail Online

 

 

 

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்