வினோதம்

ஆக்டோபர் முதல் டிசம்பர் வரை மிக அதிகமாக விளையும்  பூசணிக்காய் உலகம் முழுதும் பிரசித்தமான மரக்கறிகளில் ஒன்று என்பதுடன்  ஹலோவின் பண்டிகை என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவதும் இந்தப் பூசணிக்காய் தான். ஆனால் ஹலோவினுக்கான அலங்காரத்துக்கு மட்டுமான ஒன்று இது என நீங்கள் கருதினால் அது தவறாகும்.

ஏனெனில் மிகவும் ஊட்டச்சத்து உடைய இலையுதிர் காலத்தின் மிக முக்கியமான உணவு பூசணிக்காய் எனப்படுகின்றது. இதன் சதை, விதை மற்றும் எண்ணெய் என்பன மிக அதிக பயன்பாடு உடையவை என்பதுடன் எமது சுகாதரத்துக்குப்  பலவகைகளில் உதவவும் செய்கின்றன. முழுதும் விட்டமின் A உடைய பூசணிக்காய் நாம் வயதாவதை மெதுவாக்கி என்றும் இளமையாக இருக்கச் செய்யும் எனப்படுகின்றது. இதன் விதைகள் மிக உயர்ந்த மட்ட ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் கொண்டிருப்பதால் புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் உடையது எனப்படுகின்றது. மேலும் இதன் ஃபைபர் நமது நெஞ்சில் சேரக் கூடிய கொலஸ்ட்ரோலைக் கட்டுப் படுத்தக் கூடியதாகும்.

பூசணிக்காயை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொண்டால் நமது உடல் எடையைக் குறைக்க அது உதவும் எனப்படுகின்றது. பீட்டா கரோட்டேனே என்ற பதார்த்தத்தை அதிகளவு கொண்டுள்ள பூசணிக்காய் எமது உடலின் தோல்களில் உள்ள கலங்கள் பாதிப்படைவதைத் தடுக்கின்றது. இதனால் முகத்தில் சுருக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் அல்ஷெயிமர் போன்ற ஞாபக மறதி நோய்களையும் தடுக்க வல்லதாம்.

பூசணிக்காய் சோஸுடன் கூடிய பாலை அருந்தினால் அது எமது களைப்பையும் மனச்சோர்வையும் போக்கி நல்ல மனநிலையைத் (mood) தரும் எனப்படுகின்றது. இதில் உள்ள மக்னீசியம் கோபம் மற்றும் அயர்ச்சியை நீக்கக் கூடியதாகும். இதில் உள்ள அதிகபட்ச விட்டமின் காரணமாகப் பார்வைத் திறன் அதிகரிக்கும் எனப்படுகின்றது. இதில் உள்ள ஃபைபர் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் இரத்த அழுத்தத்தைப் பேணி இதயத் துடிப்பைச் சீராக்குகின்றது. மேலும் எமது நோய் எதிர்ப்புத் தொகுதியான (immune system) இற்கும் பூசணிக்காய் உதவி புரிவது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.