வினோதம்
Typography

மலேசியாவின் போர்னியோ தீவில் உலகின் மிகப் பெரிய மழைக் காட்டு மரம் படம் பிடிக்கப் பட்டுள்ளது.

309 அடி உயரமான இந்த மரம் உலகில் மிகப்பெரிய உயிரினமான நீலத்திமிலங்கள் 3 வரிசையாக நிறுத்தப் பட்டால் எவ்வளவு நீளம் இருக்குமோ அதை விட சற்று அதிக உயரம் உடையது ஆகும். இதற்கு முன் உலகின் மிகப் பெரிய மரமாக சாதனை படைத்த 294 அடி நீளமான மரமும் ஜூன் மாதம் மலேசியாவில் தான் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது கண்டு பிடிக்கப் பட்ட 309 அடி உயர மரமானது அதற்கு சற்று ஏறக்குறைய உயரம் கொண்ட 49 மரங்களை சுற்றிலும் கொண்டது ஆகும். மலேசியாவின் சாபாஹ் மாநிலத்தில் உள்ள வனத்தில் லிடார் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி விமானம் மூலம் எடுக்கப் பட்ட புகைப் படத்திலேயே குறித்த மரம் சிக்கியுள்ளது. இம்மரத்தின் Canopy எனப்படும் விதானமும் 132 அடி விட்டம் உடையது ஆகும்.

குறித்த விமானம் மூலம் உலகின் மிக உயரமான மரங்கள் மட்டுமன்றி உயிரினங்களின் வதிவிடம், கார்பன் ஸ்டொக்ஸ் மற்றும் கனோப்பி உயிர்ப் பல்வகைமை என்பன பற்றிய ஆய்வு பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குனரான ஜேம்ஸ் கமெரூன் மற்றும் ஐ.நா அபிவிருத்தித் திட்டம் என்பவற்றால் நிதியுதவி வழங்கப் பட்டு செயற்படுத்தப் பட்டு வரும் நிகழ்வாகும்.

அண்மையில் இனம் காணப் பட்ட இம்மரங்களில் 50 மரங்கள் 294 அடி உயரத்தை விட அதிகமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே உயரமான மழைக்காட்டு வகையைச் சேராத மரங்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா இலுள்ள Redwood தேசிய பூங்காவில் அமைந்துள்ளன. இங்கு அமைந்துள்ள உலகில் மிக  உயரமான ரெட்வுட் மரம் 377 அடி உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்