வினோதம்

நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் சனத்தொகை, புவி வெப்ப மயமாதல், தீவிரவாதம், யுத்தம், அகதிகள் பிரச்சினை போன்ற ஏராளமான பிரச்சினைகள் இருக்கும் போது பூமி எப்போது அழியும் என்பது குறித்த சிந்தனை எவருக்கும் தேவையாக இருக்காது.

ஆனால் இது நிச்சயமாக இன்னும் இவ்வளவு வருடங்களில் இப்படித்தான் நிகழும் என ஆதாரத்துடன் சொல்கின்றார்கள் விஞ்ஞானிகள். அதாவது இன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் இப்போது இருக்கும் மஞ்சல் குள்ளன் (Yellow dwarf star) என்ற அந்தஸ்தில் இருந்து அதில் செயற்பட்டு வரும் அணுக்கரு செயற்பாடு தீவிரமடைந்து அழியும் கட்டத்தை நெருங்கும் போது 100 மடங்கு பெரிதாகி சிவப்பு இராட்சதன் (Red giant) நிலையை அடையுமாம்.

அதன் போது சூரியனின் எல்லைக்கு உள்ளே வரும் புதன் வெள்ளி போன்ற கிரகங்களை அது விழுங்கி விட அதன் வெப்பக் கதிர்களில் சிக்கி பூமி அழிவை சந்திக்கும் எனவும் அப்போது பூமியின் உயிர் வாழ்க்கை (இதற்குள் நாம் வேறு உலகங்களுக்குக் குடி பெயர்ந்திருந்தால் தப்பிப்போம்!) பூரணமாக ஒரு முடிவுக்கு வரும் எனவும் விஞ்ஞானிகள் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு 2 பில்லியன் வருடங்கள் கழித்து சூரியன் பூமியின் அளவே கொண்ட சிறிய வெள்ளைக் குள்ளனாக (White dwarf) மாறி பின்னர் பூரணமாக அழிவடையுமாம்.

பூமியில் இருந்து 208 ஒளியாண்டு தூரத்தில் உள்ள சூரியனைப் போன்ற ஆனால் அழிவின் விளிம்பில் உள்ள சிவப்பு இராட்சத நட்சத்திரம் ஒன்றை சுற்றி வரும் அழிந்து கொண்டிருக்கும் கிரகம் (Dying planet) ஒன்றை தாம் அவதானித்து இருப்பதாகவும் அந்த அவதானமே பூமியின் தலைவிதிக்கான ஆதாரம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் உயிர்வாழ்க்கை துவம்சம் செய்யப் பட்டாலும் கடினமான பாறைகளால் ஆன அதன் மையப் பகுதி அழியாது எஞ்சியிருக்குமா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.