வினோதம்

அறிவியலாளர்களைப் பிரமிக்க வைக்கும் மனித உடலுறுப்புக்களில் முக்கியமான நம் மூளை எப்போது தனது பூரண வளர்ச்சியை எட்டுகின்றது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாதென தமது மூளையைக் கசக்கி வருகின்றனர் உயிரியலாளர்கள்.

மேலும் சராசரி மனிதனின் மூளை 30 வயது வரை குறிப்பிடத்தக்க வளர்ச்சி மாற்றங்களை அடைந்து வருவதற்கு ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். சாதாரணமாக சர்வதேச நாடுகள் அனைத்திலும் சட்டரீதியாக பருவமடையும் (maturing) வயது 18 ஆக இருக்கையில் மூளையின் வளர்ச்சி பற்றிய அறிவியலாளர்களின் இத்தகவல் பொது மக்கள் சட்டப் படி பருவமடையும் வயது எது என்பது குறித்து சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும் வாகனம் ஓட்டுதல், வாக்களித்தல், திருமணம் செய்தல், இராணுவத்தில் இணைதல் போன்ற விடயங்களில் 30 வயதுக்குக் குறைந்தவர்கள் அனைவருமே பூரணமாகத் தகுதி உடையவர்களாக இருப்பதில்லை என்றும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால் 30 வயது அல்லது அதுக்குக் குறைந்த வயதுடையவர்கள் குற்றச் செயல்கள் புரிந்தால் அதற்கான தண்டனையும் அவர்களை விட வயதுக்கு மூத்தவர்களுக்கு இணையாக வழங்கப் படக் கூடாது என்றும் தெரிவிக்கப் படுகின்றது.

ஒரு விடயத்தில் ஊன்றிக் கவனம் செலுத்துதல், தீர்மானங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சிரத்தை எடுத்தல் (risking) போன்ற செய்கைகளில் மனித மூளை அதன் 4 ஆவது தசாப்தத்தில் தான் அதாவது 30 வயதுக்குப் பின்னர் தான் வினைத்திறனுடன் செயலாற்றுகின்றது என்கின்றனர் உயிரியலாளர்கள்.

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.