வினோதம்

2022 ஆம் ஆண்டு பூமியில் வசிக்கும் எமது கண்களுக்குத் தெரியும் விதத்தில் வானில் பெரு வெளிச்சத்துடன் சூப்பர்நோவா வெடிப்பு தெரியவுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக பைனரி நட்சத்திரப் பொறிமுறை (Binary star system) என்ற ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளே இந்த சூப்பர் நோவா வெடிப்பை மும்மொழிந்துள்ளனர். இவர்களது கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் மனித குல வரலாற்றில் முதன் முறையாக ஒரு சூப்பர்நோவா பிரகடனம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும் இந்த சூப்பர் நோவா 1 வருடமாவது நீடிக்கும் என்றும் இரவு வானில் மிக வெளிச்சமான புதிய நட்சத்திரமாக அது தோன்றும் எனவும் கணிப்பிடப் பட்டுள்ளது.

அது சரி, சூப்பர் நோவா என்றால் என்ன என்று ஒரு கேள்வி வானியலில் பரிச்சயம் இல்லாதவர்களுக்குத் தோன்றும் அல்லவா? அவர்களுக்கான விளக்கம் இதோ,

மிகப்பெரிய இரு நட்சத்திரங்கள் தமது ஆயுள் காலம் முடியும் தறுவாயில் ஒன்றுடன் இன்னொன்று மோதிக் கொள்ளும் போது ஏற்படும் பெரு வெடிப்பும் அதனால் ஏற்படும் மிகச் செறிவான வெளிச்சமுமே சூப்பர் நோவா (Super Nova) எனப்படுகின்றது. இது போன்ற வெடிப்புக்கள் நமது பூமியில் இருந்து மில்லியன் ஒளிவருடங்கள் தூரத்தில் ஏற்படுகையில் எம்மால் பார்க்க முடியும் எனினும் இவை எப்போது ஏற்படும் எனக் கணிப்பது தான் கடினமானது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது சூப்பர் நோவாவைக் கணிப்பது மில்லியனில் ஒரு பங்கே சாத்தியம் என அவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் மனிதகுல வரலாற்றில் முதன் முறையாகக் கணிக்கப் பட்டுள்ள இந்த சூப்பர் நோவா, 2022 ஆம் ஆண்டு பூகோளத்தின் வடக்கே தென்படும் அன்னம் போன்ற வடிவம் கொண்ட நட்சத்திரத் தொகுதியான Cygnus இற்கு இடையே புதிய நட்சத்திரமாகத் தோன்றும் எனப்படுகின்றது.

சூப்பர் நோவாக்கள் அடையாளம் காணப்படத் தொடங்கியதன் பின்னர் தான் வானியலில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக நமது பிரபஞ்சம் அதிகரிக்கும் வேகத்தில் விரிவடைகின்றது என்பதற்கு ஓர் அவதானமாகவும் சூப்பர் நோவா விளங்கியதாகக் கூறப்படுகின்றது.

இதைவிட சூப்பர் நோவாக்கள் மூலம் தான் பிரபஞ்சத்தில் புதுப் புது மூலகங்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் பரவுவதாகவும் இதனால் உயிர்ப் பல்வகைமை கூட ஏற்படுவதாகவும் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் : Mail Online

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.