வினோதம்
Typography

துபாய் விமான பயணத்தில் பயணிகளுக்கு இணையாக, பால்கன் பறவைகளும் பயணம்
செய்ய சவுதி இளவரசர் டிக்கெட் எடுத்த விவகாரம் மற்றும் விமானத்தில்
பால்கன் பறவைகள் இருக்கும் போட்டோ, சமூகவலைதளங்களில் வைரலாக
பரவிவருகிறது.

இதுதொடர்பாக, துபாயில் இருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் பத்திரிகையில்
வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பால்கன் பறவைகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய பறவை. சவுதி
இளவரசர், இந்த பால்கன் பறவைகளை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு
கொண்டு செல்லும் பொருட்டு, 80 டிக்கெட்களை புக் செய்து, அப்பறவைகளை சீட்
உடன் கட்டி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய உத்தரவிட்டதாக
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில், பால்கன் பறவைகளுக்கு என்று பிரத்யேக
பசுமை பாஸ்போர்ட்கள் இருப்பதாகவும், இந்த பாஸ்போர்ட், பால்கன் பறவைகளை,
பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, பாகிஸ்தான், மொனாக்கோ
மற்றும் சிரியா நாடுகளின் வான்பரப்பில் பறக்க அனுமதி அளிக்கிறது.

இந்த 80 பால்கன் பறவைகளில், ஆறு பறவைகள், எகனாமி வகுப்பில் பயணம்
செய்ததாக கத்தார் ஏர்வேஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்