வினோதம்

பென்குயின்கள், பூமியில் 7 கோடி ஆண்டுகளாக வசித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. 

அண்டார்க்டிக் கண்டம் மற்றும் நியூஸிலாந்து உள்ளிட்ட தென்துருவ நாடுகளில் வசிக்கும் பென்குயின் பறவைகள் பலரும் விரும்பக் கூடியவை.. டைனோசர் வாழ்ந்து வந்த அதே காலத்தில் பென்குயின்களும்,ராட்சத வடிவில் தென்துருவப் பகுதிகளில் இருந்துள்ளன.

மேலும், 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக, பூமி மீது விண்கல் மோதியபோது டைனோசர் விலங்குகளுடன், இந்த ராட்சத பென்குயின்களும் அழிந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கான ஆதாரம், நியூஸிலாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது.