வினோதம்

தோனி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் டிக்கெட்
பரிசோதகராக பணிபுரிந்ததவர்.

அப்போது, ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்று அடிக்கடி டீ
குடிப்பாராம். அதன்பின் அவர் கிரிக்கெட் வீரராக மாறி புகழ்
பெற்றார்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தோனி, அந்த டீக்கடைக்கு
எதிரில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் சென்று தங்கியுள்ளார். அப்போது ஜன்னல்
வழியாக அந்த டீக்கடையை பார்த்த அவருக்கு பழைய ஞாபகங்கள் வந்துள்ளன.

உடனடியாக அந்த டீக்கடைக்கு சென்று டீ கடை முதலாளியை சந்தித்து
பேசியுள்ளார். மேலும், அவரை ஹோட்டலுக்கு அழைத்து சென்று, விருந்து
கொடுத்து அசத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து கூறிய அந்த டீ கடை முதலாளி
“ தோனி அப்போது ஒரு நாளைக்கு மூன்று முறை என் கடைக்கு வந்து டீ
குடிப்பார். தற்போது அதை ஞாபகம் வைத்து என்னிடம் வந்து பேசி, எனக்கு
விருந்தும் அளித்தார். எனவே, எனது கடையின் பெயரை தோனி டீ ஸ்டால் என
மாற்றப்போகிறேன்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.