வினோதம்

யானைகள் எதையும் மறக்காதவை என்பார்கள்.ஆனால் அவை பெரும்பாலும் தூங்குவதே
இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

போட்ஸ்வானா யானைகளை கண்காணித்த ஆய்வாளர்கள், அவை சராசரியாக ஒரு நாளைக்கு
இரண்டுமணி நேரமே தூங்குவதாகவும் சிலநாட்கள் அவை தூங்குவதே இல்லை
என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

ஆரோக்கியமான தூக்கமே நினைவாற்றலுக்கு அடிப்படை என்று பல ஆய்வுகள்
காட்டியுள்ளன.ஆனால் அதிகபட்ச நினைவாற்றல் கொண்ட பாலூட்டிகளான யானைகள்,
மிகக்குறைவான நேரமே தூங்கினாலும் அவற்றின் நினைவாற்றல் பாதிக்கப்படாமல்
இருப்பதன் ரகசியம் என்ன என்கிற ஆய்வில் ஆய்வாளர்கள் தற்போது ஈடுபட்டு
உள்ளனர்.