வினோதம்

சுண்டெலிகளின் இரு வகையான ஸ்டெம் செல்களில் செயற்கை கரு முட்டைகள்

உலகிலேயே முதன்முறையாக சுண்டெலிகளின் இரு வகையான ஸ்டெம் செல்களைப்
பயன்படுத்தி செயற்கை கரு முட்டைகளை பிரிட்டன் விஞ்ஞானிகள்
உருவாக்கியுள்ளனர். தாங்கள் கண்டுபிடித்த செயற்கை கரு முட்டையானது
ஆரோக்கியமான கருவாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும், அதற்கு
ஸ்டெம் செல்லின் மூன்றாவது வடிவம் தேவை என்றும் கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள் கரு பைக்குள் வளரும் இந்த ஸ்டெம் செல்லின் மூன்றாவது வடிவம் தான்
ஆரோக்கியத்தை வழங்கும்.தற்போது, இதே நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை மனித
கருக்களை உருவாக்கும் முயற்சிகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கரு
உருவாக்க சிகிச்சைகளை மேம்படுத்தும் நம்பிக்கையில் இந்த ஆராய்ச்சிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.மனித கரு பரிசோதனைகளுக்கு பிரிட்டன்
விதித்திருக்கும் 14 நாள் சட்ட வரம்பானது பொருந்தாது என்பது
குறிப்பிடத்தக்கது.

விஷாலுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் தனது அடுத்த படமாக பிசாசு 2 குறித்த அறிவிப்பினை இயக்குநர் மிஷ்கின் நேற்றிரவு இன்று அதிகாலை இந்தியநேரம் நள்ளிரவு 12 மணிக்கு அறிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் காதலித்து பெற்றோர் சம்பத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.