வினோதம்

நேற்று வியாழக்கிழமை ஜூலை 20 ஆம் திகதி அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவுக்குச் சென்று நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாள். ஆனால் இன்று உலகில் உள்ள பல மக்கள் நிலவில் கால் தடம் பதித்த இந்த நிகழ்வு பொய்யாக சித்தரிக்கப் பட்ட ஒன்று என நம்புகின்றனர் என்பதை நீங்கள் அறிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்.

பிரிட்டன் மக்கள் தொகையில் 1/2 பங்கிற்கும் அதிகமானவர்கள் நிலவில் ஆம்ஸ்ட்ரோங் அல்லது அவருக்குப் பின் சென்றவர்கள் கால் பதித்தது எல்லாம் பொய்யான தகவல்கள் என நம்புகின்றனர். அவ்வளவு ஏன்? பிரிட்டனின் 2/3 பங்கினர் டைனோசர் என்ற உயிரினம் பூமியில் ஒரு காலத்தில் உயிர் வாழ்ந்தது என்பதே சித்தரிக்கப் பட்ட பொய்யான ஒரு தகவல் என்கின்றனர். 1969 ஆம் ஆண்டு நிலவில் ஆம்ஸ்ட்ரோங் கால் பதித்த நிகழ்வை அமெரிக்கா நேரடியாக தொலைக் காட்சி வழியாக ஒளிபரப்பியதை எமது தாய் தந்தையர் அல்லது அவர்களின் தாய் தந்தையர் பார்த்திருக்கலாம்.

இந்நிலையில் இன்று இந்த நிலவில் கால் பதித்த நிகழ்வுகள் அனைத்தும் வதந்தி என்றும் சொல்பவர்கள் அனைவரும் 25-34 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் ஆவர். நாசாவின் தகவல் படி நீல் ஆம்ஸ்ட்ரோங்குடன் சேர்த்து அவருக்குப் பின் இதுவரை சுமார் 12 விண்வெளி வீரர்கள் நிலவில் நடை போட்டதாகவும் 1969 தொடக்கம் 1972 வரை நீடித்த இப்பயணங்களில் இறுதியாக 1972 ஆம் ஆண்டு அப்போலோ 17 இல் 6 ஆவது வெற்றிகரமான நிலவுப் பயணம் அமைந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் இதன் பின்னர் நாசா சடுதியாக நிலவுக்கான பயணங்களை நிறுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா தனது முதலாவது விண்வெளி வீரரான யூரி ககாரினை 1961 ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி மீட்டிருந்தது. இதை அடுத்து ஆரம்பித்த விண்வெளிப் போட்டி காரணமாகவே நாசா அவசர அவசரமாக நிலவுக்கான விண்வெளி செயற்திட்டங்களை மேற்கொள்ளக் காரணம் என்ற உண்மையை மட்டும் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர்.

எது எப்படியோ பிரிட்டனின் மக்கள் தொகையில் எத்தனை பேர் குறித்த இந்த விடயங்களில் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதற்கான தகவல் கீழே:

1.ஆவி மற்றும் உயிர் (Spirit) - 30%
2.கடவுள் - 29%
3.வேற்றுக்கிரக உயிரினங்கள் - 24%
4.மந்திர வாதிகள், சூனியக்காரி -12%
5.லாஹ் நெஸ் மிருகம் - 10%
6.கற்பனை வடிவம் - 10%
7.பனி மனிதன், யேட்டி - 10%
8.பெரிய பாத உயிரினம் - 8%
9.கதைகளில் வரும் உயிரினங்கள் - 8%
10.டிராகன்கள் - 5%

தகவல் : Mail Online

http://www.dailymail.co.uk/sciencetech/article-3698971/More-half-Brits-think-moon-landings-FAKED-two-thirds-don-t-believe-dinosaurs-existed.html

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மோடி அரசு தென்மாநிலங்களில் இந்தியை வலுக்கட்டாயமாக திணித்து வருகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் காதலித்து பெற்றோர் சம்பத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.