வினோதம்

உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வது இரவில் குறைந்த சிறுநீர் கழிக்க
வழிவகை செய்யும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இரவில் அதிகப்படியான சிறுநீர் கழிக்கும் நிலையான நாக்டுரியா, குறிப்பாக
60 வயதை தாண்டியவர்களுக்கு வருகிறது; அதனால் இரவில் தூக்கம் தடைபடுவதால்
அது வாழ்க்கை நடைமுறையை பாதிக்கிறது.300 தன்னார்வலர்களிடம் மேற்கொண்ட
ஆய்வில், உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வதனால் குறைந்த அளவில்
சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.சமச்சீர்
உணவு, இந்த பிரச்சனையை சரி செய்ய உதவும் என பிரிட்டன் மருத்துவர்கள்
தெரிவிக்கின்றனர்