வினோதம்

டால்ஃபின்களுக்கு மிகப்பிடித்தமான உணவு ஆக்டோபஸ் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஆக்டோபஸை இரையாக சாப்பிடும்போது கொடிய இடையூறுகளை டால்ஃபின்கள்
சந்திக்கும் நிலையும் ஏற்படுவது உண்டாம்.எனவே, ஆக்டோபஸ்களை பிடித்தவுடன்
அவற்றை அசைத்து, காற்றில் மேலே தூக்கி போட்டு மீண்டும் பிடித்து
சாப்பிடுவதற்கு தயார் செய்வதை ஆய்வாளர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

"டால்ஃபின்களின் இந்த நடத்தையை கடல் உணவு தயாரிப்போடு எல்லோரும் தொடர்பு
படுத்துகின்றனர்" என்று இந்த ஆய்வை வழிநடத்திய டாக்டர் கேட் ஸ்புரோஜிஸ்
தெரிவித்திருக்கிறார்.