வினோதம்

பூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வரும் சூரியனைப் போல் பத்தாயிரம்
மடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி
ஜேர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை படைத்துள்ளனர்.

அந்நாட்டின் கோலேன் நகரத்துக்கு அருகே உள்ள ஜூலிச் என்ற இடத்திலே இந்த
ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரொஜெக்டர்களில் பயன்படுத்தப்படும்
அதிகமான ஒளியை உமிழும் 147 பல்புகளை ஒரே நேரத்தில் ஒளிர வைத்து அதன்
வெப்பத்தை கணக்கிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.