வினோதம்

பிரமாண்டமாக இருக்கும் இந்தியாவின் முதல் கண்ணாடி ரயில் பெட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுற்றிலும் கண்ணாடி பொறுத்தப்பட்டுள்ள ’Vistadome Coaches’ என்னும் ரயில் பெட்டியை இந்திய ரயில்வே கடந்த 16-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் முதல்முறையாக இது போன்ற கண்ணாடி ரயில் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கண்ணாடி ரயில் பெட்டி, விசாகப்பட்டினம்-கிரண்டூர் பயணிகள் ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது. இதனை கொடியசைத்து துவக்கி வைத்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்தார். பிரமாண்டமாக இருக்கும் இந்த கண்ணாடி ரயில் பெட்டி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.