வினோதம்

இந்தோனிஷியாவில்நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான
வழக்கொன்றை சந்தித்தது.

வயதான பெண்மணியொருவர்,தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக
அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை மிகக்கவனமாக
செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி
கூறினார். நான் களவாடியது உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான்.
வேறுவழியின்றி இச்செயலை செய்தேன். என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார்.

இதை கேட்டதும் நீதிபதி,என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான்
உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாயா
(100 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கின்றேன்.இதை கட்ட தவறினால்
இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."
இவ்வாறு தீர்ப்பளித்தார்.

பின்னர் தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை
பார்த்து.இங்குள்ள ஒவ்வொருவர்மீதும் நான் ஐம்பதுனாயிரம் 5 டொலர் ஐம்பது
காசு தண்டணையாக இடுகின்றேன்.காரணம் இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை
உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி
தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு
இத்தண்டணையை அளிக்கின்றேன்.என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக,
அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார்.

இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார்.
இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து   10
இலட்சம் ருபாயாவை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை
தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது
கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.