வினோதம்

ஃப்ளோரிடாவில் உள்ள ஒருவர் பாம்பு ஒன்றுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்த
போது, அது கடித்து வைக்க தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார்.

ஃப்ளோரிடாவில் உள்ள ஒருவர் பெரும் விஷத்தன்மை வாயந்த ரேட்டில் ஸ்னேக்
என்ற பாம்பு ஒன்றுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்த போது அவரது முத்த
முயற்சியை நிராகரித்த அந்த பாம்பு, அவரை கடித்து விட்டது. தற்போது
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த திங்களன்று, ஃப்ளோரிடா மாகாணத்தின் வட-கிழக்கில் உள்ள புட்ணம்
பிரேதேசத்தை சேர்ந்த சார்லஸ் கோஃப் இந்தப் பாம்பை பார்த்தார்.ஒரு நாள்
கழித்து, அவருடைய அண்டைவீட்டுக்காரர் என உள்ளூர் சிபிஎஸ் சேனல் கூறும்
ரான் ரெயினோல்ட் என்பவர் அந்த பாம்புடன் விளையாட ஆரம்பித்துள்ளார்.

அதன்பிறகு தான் இந்த தவறான வேலையைச் செய்துள்ளார்.
பாம்பு கடித்த ரெயினோல்ட் விமானம் மூலம் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு, அவர் தற்போது உடல்நிலை தேறி வருகிறார்.