வினோதம்

மனித இனம் முதலில் தோன்றியது ஆப்ரிக்காவில் அல்ல, ஐரோப்பாவில் தான் என்று
ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதனின் மூதாதையர்களான ஏப்ஸ் வகை குரங்குகள் 70 லட்சம் ஆண்டுகளுக்கு
முன் மத்திய ஆப்பிரிக்காவில் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பி
வருகின்றனர். இந்த நிலையில் மனித இனம் முதலில் தோன்றியது ஐரோப்பாவில்தான்
என ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஜெர்மனியைச் சேர்ந்த
டுபிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானி மாடேலைன் போமே தலைமையிலான
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்கேரியன் அறிவியல் அகாடமியை சேர்ந்த
நிகோலாய் ஸ்பேஷவ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இவர்கள் ஐரோப்பா கண்டத்தில் உள்ள கிரீஸ் நாட்டில் கிடைத்த மனிதனின்
மூதாதையர்களான ஹோமினிட்களின் கீழ்தாடை, பல்கேரியாவில் கிடைத்த அந்த
இனத்தின் கடைவாய்ப்பல் படிமங்கள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ததில் இந்த
முடிவு கிடைத்துள்ளது. இதன்படி மனித இனம் தோன்றியது ஐரோப்பா கண்டத்தில்
தான் என்று அவர்கள் கூறுகின்றனர். இவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்த மனித
மூதாதையர்களை விட 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளதும்
தெரியவந்துள்ளது. ஆராய்ச்சி தொடர்பாக அந்த குழுவின் தலைவர் போமே
கூறுகையில், இந்த படிமங்கள் 70 லட்சம் ஆண்டுக்கு முந்தையது.
சிம்பன்சியும் மனிதனும் என 2 ஆக பிரிந்தது கிழக்கு மத்திய தரைக்கடல்
பகுதியில் தான். ஆப்ரிக்காவில் அல்ல என்றார்.

 

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள்  இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன. 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.