வினோதம்

அமெரிக்காவின் யலோ ஸ்டோன் தேசிய பூங்காவில் (Yellow Stone National Park) இல் தான் உலகில் மிக ஆபத்தான எரிமலைகளின் தொகுதி அமைந்துள்ளது.

இந்தத் தொகுதியில் உள்ள தரை மேற்பரப்பு கடந்த 5 வருடங்களில் இல்லாதளவு மிக இயங்கு நிலையில் (Active) இருப்பதாகப் புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது இத்தரை மேற்பரப்பில் ஜூன் 12 ஆம் திகதி முதல் கடந்த 2 வாரங்களில் மாத்திரம் 878 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதில் மிக வலிமையான அதிர்வாக ஜூன் 15 இல் 4.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதியப் பட்டுள்ளது. இந்த அதிர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்த சூப்பர் எரிமலை (Super Volcano) ஒன்று வெடித்துச் சிதறுவதற்கான அறிகுறியாகக் கூட இருக்கும் வாய்ப்பும் உள்ளது என புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூப்பர் எரிமலை வெடித்துச் சிதறினால் அது 1980 இல் வெடித்துச் சிதறிய மௌண்ட் ஹெலென் என்ற சக்தி வாய்ந்த எரிமலையை விட 1000 மடங்கு வீரியமானதாக இருக்கும் என்று கூறும் புவியியலாளர்கள் அதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளதாகவும் ஆறுதல் தெரிவித்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து 9 மைல் ஆழத்தில் குறித்த அதிர்வுகளைப் பதிவு செய்துள்ளதாகக் கூறும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தொடர்ந்து Yellow Stone தேசியப் பூங்காவில் ஏற்பட்டு வரும் அதிர்வுகளை அளவீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

நன்றி, தகவல் : Mail Online

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள்  இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன. 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.