Tuesday, May 21st

Last update10:22:12 PM

வில்லியம் : கேட் மிடில்டன் தம்பதியினரின் கோலாலம்பூர் விஜயம் : ஆர்ப்பரிப்புடன் மக்கள் (புகைப்படங்கள்)

மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசியார் கேத் மிடில்டன் ஆகியோர், தலைநகர் கோலாலம்பூரில் உள்ள Assayakirin பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்டனர்.

பள்ளிவாசல் விதிமுறைகளின் படி, பெண்கள் தமது பாதனிகளை கழற்றிவிட்டும், தலையில் முக்காடு அணிந்துமே பள்ளிவாசலுக்குள்  நுழைய வேண்டும் என்பதால் அந்த  விதிமுறைகளை இளவரசியார் கேட் மிடில்டனும் பின்பற்றினார். மலேசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலான Assayakirin இல் வெள்ளிக்கிழமைகளில் 12,0000 பேர் தொழுகைக்காக கூடுவர். இப்பள்ளிவாசலுக்கு விஜயம் செய்ததன் மூலம், வில்லியம்ஸ் - கேட் மிடில்டன் தம்பதியினர் விஜயம் செய்த முதல் பள்ளிவாசலாக இந்நிகழ்வு பதிவாகியுள்ளது.



முன்னதாக இளவரசியார் டயானா 1992 ம் ஆண்டு எகிப்து மற்றும் பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இதே முறைப்படி விஜயம் செய்திருதார். தற்போது இளவரசியார் கேட் மிடில்டனின் விஜயமும் அதை நினைவு கூறுவதாக ஊடகங்கள் பல வர்ணித்துள்ளன.




பள்ளிவாசல் விஜயத்தை தொடர்ந்து கோலாலம்பூர் மத்திய பூங்கா, இரட்டைக்கோபுர வளாகம் என்பவற்றையும் வில்லியம்ஸ் - கேட் ஜோடி பார்வையிட்டனர். பெருமளவிலான மலேசியர்கள் ஆரவாரத்துடனும், கலாச்சார நிகழ்வுகளுடனும் ராஜ குடும்பத்தினரை வரவேற்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus