Sunday, May 26th

Last update11:46:32 PM

எம்மி விருது விழாவில் நட்சத்திரங்களின் ஃபேசன் ஆடைகள் : புகைப்படம்

அண்மையில் அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சலில் நடைபெற்ற எம்மி விருதளிப்பு விழாவில் ஹாலிவூட் நடிகைகள் அணிவந்த ஆடைகள் அனைவரையும் கவர்ந்தது எனலாம்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் சிறந்த தொலைக்காட்சி தொடர்கள், நடிகர் நடிகைகள், தொலைக்காட்சி தொழில் நுட்ப கலைஞர்களுக்கு என வழங்கப்பட்டு வரும் புகழ்பெற்ற எம்மி விருதுகள் கடந்த 23ம் திகதி லோஸ் ஏஞ்சலில் இடம்பெற்றிருந்தது. 64வது பிரைம்டைம் எம்மி விருதுகள் வழங்கும் இவ் நிகழ்வில் பல ஹாலிவூட் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஒவ்வொரு விருதளிப்பு விழாவிலும் சிவப்பு கம்பளத்தில் ஹாலிவூட் நட்சத்திரங்களின் ஆடைகள் ஓர் புது ஃபேசனில் ஜொலிக்கும்.



இம்முறையும் மிகப்பெறும் இந்த எம்மி விருதளிப்பு விழாவில் ஹாலிவூட் நடிகைகள் அணிந்துவந்த ஆடைகள் புதுமையான , கூலான ஃபேசன் வடிமைப்புகளில் அமைந்திருந்தன. வெளிர் மஞ்சள் நிற ஆடைகள்தான் இம்முறை நடிகைகளின் மிகப் பிரபல தேர்வாக அமைந்ததாக கூறப்படுகிறது. அதைவிட மஞ்சள் நிற ஆடை அணிந்து வந்த நடிகைகள் பலர் விருதுகளை வாங்கிச்சென்றதும் குறிப்பிடதக்கது.

 


இருப்பினும் இந்த ஆண்டு எம்மி விருது நிகழ்வின் தேர்வு வண்ணமாக நீல நிறம்தான் இருந்தாக தெரிவிக்கின்றனர். அங்கு தற்போது வெப்பநிலை 90 டிகிரியாக இருந்தாலும் குளிர்ச்சியான நீலம், வெள்ளை, சாம்பல் போன்ற கூலான நிற ஆடைகளில் நட்சத்திரங்கள் காணப்பட்டனர்.


இந்த நிகழ்வில் சிறந்த நாடகத்துக்கான விருது ஹோம்லேண்ட் நாடகத்திற்கும் சிறந்த நடிகருக்கான விருது அந்நாடகத்தில் நடித்த டேமியன் லெவிஸ் (DAMIAN LEWIS) என்வருக்கும் வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதும் அந்நாடகத்தில் நடித்த Claire Danes என்பவருக்கு கிடைத்திருந்ததோடு சிறந்த நகைச்சுவை நாடகத்திற்கான விருது மொடன் பெமிலி (Modern Family)கும் வழங்கப்பட்டது. மேலும் தொலைக்காட்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டிருந்தது.

 

Photo: Reuters/Ap

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus