Thursday, May 23rd

Last update09:22:00 PM

வேகமாக வளர்ந்து வருகிறது புதிய உலக வர்த்த மையக் கட்டிடம்

நியுயோர்க் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் ஆகின்றன.

இதனையடுத்து உலக வர்த்தக மைய கட்டிடங்களான இரட்டைக்கோபுரங்கள் இருந்த கிரவுண்ட் ஜீரோவுக்கு அருகே புதிதாக மீண்டும் ஓர் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

நியூயோர்க் நகரின் மன்ஹாட்டன் தீவுப்பகுதியில் அமைந்திருந்த உலக வர்த்தக மைய இரட்டைக்கோபுரங்களை கடந்த 2001 செப்டம்பர் 11ம் திகதி தீவிரவாதிகள் விமானங்களை கொண்டு தாக்கினர். இதில் 110 மாடிகளை கொண்ட அக் கட்டிடம் சரிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட 3000 பேர்வரை உயிரிழந்தனர்.


உலகையே உழுக்கிய இச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 11 வருடங்கள் ஆகின்றது. ஒவ்வொரு வருடமும் 9/11 நினைவு தின நிகழ்வுகள் இரட்டைக்கோபுரம் இருந்த இடமான கிரவுண்ட் ஜீரோவில் நடைபெருவது வழக்கம். அதேபோல் இன்றும் இரட்டைக்கோபுரம் இருந்த இடத்தில் 11வது நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெருகின்றன.


இதனிடையே நியுயோர் கட்டிட பொரியாளர்கள் புதிதாக மீண்டும் ஓர் கட்டிடத்தை அதே கிரவுண்ட் ஜீரோவுக்கு அருகே அமைத்து வருகிறார்கள். "freedom tower" எனும் பெயரில் மொத்தம் 4 கட்டிடங்களாக கட்டப்படவிருக்கும் இக் கட்டிடம் 3.8பில்லியன் டாலர் செலவில் 1,776 அடி உயரமாக கட்டப்படுகிறது. மேலும் 16 ஏக்கர் பரப்பளவில் 104 மாடிகளுடன் கட்டப்படவிருக்கும் இக் கட்டிடங்களின் பெரும்பாலன பகுதி அடுத்த ஆண்டு நிறைவடைந்து விடும் என தெரிவிக்கப்படுகிறது.


முதற்கட்டமாக 4 அலுவலகங்கள் 72 மாடிகளில் இக் கட்டிடம் அமையப்பெற்று அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளது. கண்காணிப்பு அலுவலகங்களுடன் மிகுந்த பாதுகாப்புடனும் கட்டப்பட்டு வரும் இக் கட்டிடத்தின் வடிவம் கீழே சதுரமாக கட்டப்பட்டு மேலே செல்லும்போது, குறுகி கியூபிக்காக மாற்றப்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

மாதிரித் தோற்றம்

முன்னதாக  கடந்த ஆண்டு நடந்த நினைவு தினத்தின்போது 8 ஏக்கர் பரப்பளவிலான நினைவு நாற்கோண கட்டிடப்பகுதியின் பெரும்பகுதி திறந்து வைக்கப்பட்டது. 2020ல்தான் நான்கு கட்டிடங்களும் நினைவு கண்காட்சி பகுதியும் முழுவதுமாக கட்டி முடிக்கப்படும் என பொறியாளர்கள் கூறியுள்ளனர்.

Photo: ap/reuters

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus