Thursday, May 23rd

Last update05:21:18 PM

நான் பொம்மை போலல்ல! - என்னைப்போன்றே பொம்மைகள்! : புகைப்படங்கள்

19வயது நிரம்பிய Anastasiya Shpaginaஎனும் இந்தப்பெண் தன்னை ஒரு பொம்மை போல் மாற்றிக்கொண்டுள்ளார்.

உக்ரைன் நாட்டினைச் சேர்ந்த இப் பெண் ஜப்பானின் பிரபல அனிமேஷேன் காட்டூன் கதாபாத்திரம் ஒன்றினைப் போல் கண்கள், தலைமூடியின் நிறம், உள்ளிட்டவற்றை மேக்-அப் மூலம் மாற்றி நிஜ பொம்மை போன்றே காட்சியளிக்கிறார்.



தன் கண்களை மட்டும் மேக்-அப் போடுவதற்கு சுமாரக 1மணியத்தியாலம் எடுத்துக்கொள்ளும் இவர் அறுவை சிகிச்சை மூலம் மேலும் தன் கண்களை அழகுப்படுத்த விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.


தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வரும் பொம்மை புகைப்படங்களும், நான் பொம்மை போலல்ல! - என்னைப்போன்றே பொம்மைகள் என எழுதியிருக்கும் வசனங்களும் பலரை கவர்ந்து வருகிறது.  தற்போது இவர் பிரபலமாகி வருவதுடன் கண்களுக்கு மேக்-அப் போடும் விதத்தினை 6நிமிட வீடியோவாக யூடியுப்பில் பகிர்ந்துள்ளார். இதுவரை இந்த வீடியோ 800,000 தடவை பார்க்கப்பட்டிருக்கிறது.


முன்னதாக  Valerie Lukyanova எனும் 21வயதுப் பெண் கூட தன்னை நிஜ வாழ்வின் பார்பி பொம்மையாக மாற்றியிருந்தார்.  Shpaginaவிற்கு இவர்தான் உண்மையான தூண்டுதலாக இருந்ததாக கூறப்படுகிறது.

இவற்றையும் காண தவறாதீர்கள்:

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus