Thursday, May 23rd

Last update06:18:30 AM

இந்திய பாரம்பரிய இசை குறித்து ஒபாமா - ரூம்னி விவாதம் நடத்தினால்? : வீடியோ

அண்மையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மிட் ரூம்னி இடையில் நேரடி தொலைக்காட்சி விவாதம் நடைபெற்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதமே உள்ள நிலையில் முதலாவது இந்நேரடி விவாதம் அமெரிக்காவில் 40 மில்லியன் பேராலும் உலகமுழுவதும் மேலும் பல மில்லியன் மக்களாலும் பார்க்கப்பட்டது.

சமீபகாலமாக  தேர்தல் பிரச்சாரங்களுக்காக அடுத்தடுத்து பல விவாதங்களில் மிட் ரூம்னி கலந்து கொண்டதால், அந்த அனுபவம் ஒபாமாவுடனான விவாதத்திலும் அவருக்கு கைகொடுத்தது. தனது லாவகமான பேச்சுத்திறன், நாவண்மையினால் ஒபாமாவை விவாதத்தில் தோற்கடித்திருந்தார். இணையத்தில் புகழ்பெற்ற இவ்வீடியோ விவாதம் உண்மையில் அமெரிக்காவின் பொருளாதார சிக்கால், வேலையில்லா பிரச்சினை, ஒபாமாவின் சுகாதார திட்டம் என்பவற்றை பற்றி அலசப்பட்டது. அதை சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு இசைக்கலைஞர், மிமிக்ரி செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிளாஸிக்கல் இசையை அமெரிக்காவில் வளம்பெற செய்வதற்கு என்ன செய்யலாம்? என ஒபாமாவிடமும் மிட் ரூம்னியுடனும் கேட்டால் அவர்கள் பதில் எவ்வாறானதாக இருக்கும் என கூறும் இந்த மிமிக்ரி குரல்களை நம்பும்படியாக அழகாக தொகுத்துள்ளார் இந்த கலைஞர். இணையத்தை குறிப்பாக இந்திய இணையப்பாவணையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது இந்த வீடியோ.

இதை உருவாக்கிய ஜோன் என்பவர் உண்மையில் உலகம் சுற்றும் இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video : John Wubbenhorst

 

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus