Saturday, May 18th

Last update10:35:12 PM

மாயன் அரசர்களின் மிக பழைமையான கல்லறை கண்டுபிடிப்பு

அரச குடும்பத்தினரை அடக்கம் செய்யும், உலகின் மிகப்பழமையான மாயன் கல்லறையினை தொல்பொருளியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கௌதமாலாவின் 'Tak'alik Ab'aj' பகுதியில் கண்டுபிடிக்கப் பட்ட இக்கல்லறையில் இருந்து, அரசவை மதகுரு ஒருவரின் பதப்படுத்தப் பட்ட சடலமும் எடுக்கப் பட்டுள்ளது. கி.மு 700 இல் ஆட்சி புரிந்த மாயன் அரசனான 'K'utz Chman' இன் சடலம் இதுவென தெரிவிக்கப்படுகிறது.

இவரின் சடலம் கி.மு 700 இற்கும் 400 இற்கும் இடையில் புதைக்கப் பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக் காலப் பகுதியிலேயே மாயன்களின் முக்கிய நாகரிகமான ஒல்மெக்கின் தொடக்கத்துக்கும் மற்றும் அதற்கு முந்தைய மாயன் கலாச்சாரங்களுக்கு இடையேயான முடிவுக்கும் இடையிலான பரிமாற்றம் நிகழ்ந்தது. அதாவது இக்காலமே புதிய மாயன் நாகரிகத்தின் உதயமாகும்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பழைய மாயன் கல்லறை மாயன் நாகரிகம் தொடர்பான பல புதிர்களுக்கு விடையளிக்கக் கூடியது என்பதுடன் 2012 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மிக முக்கிய தொல்பொருள் அதிசயம் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus